பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,398 போலீசாருக்கு பணியிடம் அறிவித்து அரசாணை வெளியீடு

Added : பிப் 27, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 10 டி.எஸ்.பி.,க்கள் உட்பட மொத்தம் 1,398 பேரும் பணிபுரியும் வகையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவங்கி ஓராண்டாகியும், மாவட்ட காவல் துறைக்கான பல்வேறு பிரிவுகள் விழுப்புரம் மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த நிலையிலேயே செயல்பட்டது.தற்போது மாவட்ட

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 10 டி.எஸ்.பி.,க்கள் உட்பட மொத்தம் 1,398 பேரும் பணிபுரியும் வகையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவங்கி ஓராண்டாகியும், மாவட்ட காவல் துறைக்கான பல்வேறு பிரிவுகள் விழுப்புரம் மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த நிலையிலேயே செயல்பட்டது.தற்போது மாவட்ட எஸ்.பி.,யாக ஜியாவுல் ஹக் பணிபுரிந்து வருகிறார். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், 3 அனைத்து மகளிர் காவல் நிலையம், 3 போக்குவரத்து காவல் நிலையம், 3 மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களை கொண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டதில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் ஏற்கனவே 1,359 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது 39 புதிய போஸ்டிங் மட்டும் போடப்பட்டு 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 10 டி.எஸ்.பி.,க்கள், 23 இன்ஸ்பெக்டர்கள், 86 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 1,398 பேர் பணிபுரியும் வகையில் கடந்த 23 ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளன.

இதில், தனிப்பிரிவு அலுவலகம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், விரல் ரேகை பிரிவு கூடம், தடயம் சேகரிப்பு, தொழில் நுட்ப பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இதனால், வரும் காலங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே காவல் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் செயல்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X