சென்னை: சென்னையில் இன்று (பிப்.,27), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.90 ரூபாய், டீசல் லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 93.11 ஆகவும், டீசல் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ 86.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE