பா.ஜ., விருப்பத்திற்கேற்ப தேர்தல் தேதிகள்: மம்தா குற்றச்சாட்டு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மம்தா, பா.ஜ., விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டினார்.மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல்கள் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. கடந்த முறை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மார்ச் 27 அன்று 30 தொகுதிகளுக்கு முதல் கட்ட

கோல்கட்டா: மேற்கு வங்கத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மம்தா, பா.ஜ., விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டினார்.latest tamil newsமேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல்கள் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. கடந்த முறை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மார்ச் 27 அன்று 30 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. இறுதியாக ஏப்., 29 அன்று 35 தொகுதிகளுக்கு 8-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளனர். 2 தேர்தல் பார்வையாளர்களை ஆணையம் நியமித்துள்ளது. தேவைப்பட்டால் 3-வது அதிகாரியும் அனுப்பப்படுவார் என கூறியுள்ளது.

இது பற்றி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மம்தா கூறியதாவது: மற்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்களிக்கிறார்கள். மேற்கு வங்கத்திற்கு மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் மாவட்டங்களை பிரிப்பது ஏன். தெற்கு 24 பர்கானாக்கள் எங்கள் கோட்டையாகும். அங்கு 3 வெவ்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளனர். எனக்கு கிடைத்த தகவலின் படி பா.ஜ.,விலுள்ள ஒருவர் விரும்பியதற்கு ஏற்பவே தேதிகள் உள்ளன.


latest tamil newsபிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆலோசனைகளின்படி தான் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதா? பிரதமரும், உள்துறை அமைச்சரும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பின்னர், அவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஏஜென்சிகள் வழியாக அனைத்து மாவட்டங்களுக்கும் பா.ஜ., பணத்தை அனுப்பியுள்ளது. நான் வங்கத்து மகள். பா.ஜ.,வை விட நான் இந்த மாநிலத்தை நன்கறிவேன். எட்டு கட்டங்களில் கூட வெற்றி பெறுவேன். என ஆவேசமாக கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-பிப்-202106:01:26 IST Report Abuse
J.V. Iyer ஆடத்தெரியாத அழகிக்கு பந்தல் சரி இல்லயாம்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-பிப்-202121:54:04 IST Report Abuse
r.sundaram உங்களுக்கு இந்த மாதிரி செய்திகள் மட்டும்தான் தெரியவரும். பிஜேபி தொண்டர்கள் கொலை ஆவதும் ஆதலால் உங்கள் கட்சியில் பெயர் கெடுவதும் உங்களுக்கு எப்போது தெரியப்போகிறது? உங்கள் கட்சியினரின் அராஜகத்தாலேயே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எட்டு கட்ட தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
27-பிப்-202121:04:14 IST Report Abuse
Thirumurugan மக்கள் பிஜேபிக்கு 303 இடங்களில் வெற்றியை அளித்து அசுர பலத்தில் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் சொல்வதுதான் அனைத்து துறையினருக்கும் (நீதி துறையும் சேர்த்துதான்) வேத வாக்கு. தமிழ்நாடு, கேரளா போல் மேற்கு வங்கத்திற்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தியிருக்கலாம். 8 கட்டங்களாக தேர்தல் என்பது மக்களை குழப்புவது ஆகும். அதுவும் ஒரே மாவட்டத்தில் 3 வெவ்வேறு தேதிகளில் தேர்தல் என்பது அராஜகத்தை உச்சம். மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை என்பது அவர்கள் தங்களுக்கானவர்களை தேர்தெடுக்கும் உரிமை மட்டும்தான். அதையாவது இந்த தேர்தல் கமிஷனும் மத்திய அரசும் நம்முடைய மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
Rate this:
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
28-பிப்-202101:45:58 IST Report Abuse
Mannai Radha Krishnanமேற்கு வங்கம் நக்சல்கள், கம்யூனிஸ்ட்கள், கிழக்கு வங்காள முஸ்லிம்களின் ஊடுருவல் என்று பல மாதிரியான எதிர்ப்புகள் உள்ளன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X