காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அது, இரு மாநில விவகாரம். பா.ஜ., தேசியக் கட்சியாக இருப்பதால், இரு மாநில மக்கள் குறித்து யோசிக்க வேண்டும். - தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி

நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர் தானே; இந்தப் பிரச்னையை தீர்க்க, இரு மாநில தலைவர்களுடன் பேச்சு நடத்தி, சுமுக உறவுக்கு வழி ஏற்படுத்தலாமே...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி பேட்டி:
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, தலா, 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். - விஜயகாந்த்

'மொத்தம், 12 ஆயிரத்து, 500 பேர் இறந்துள்ளனர். அவர்களின் வாரிசுகளுக்கு, தலா, 5 லட்ச ரூபாய் வழங்கினாலும், அரசு வேலை வழங்கினாலும் அரசு திவால். அதற்கு தான் யோசனை கூறுகிறீர்களோ...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை:
தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் அளிக்க வேண்டிய காவிரி நீரை தடுத்து வரும் கர்நாடகா, காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள எதிர்ப்பு தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை. - வைகோ அறிக்கை
'காவிரி இருக்கும் வரை; காற்று இருக்கும் வரை; கடல் நீர் இருக்கும் வரை, இந்தப் பிரச்னை ஓயப் போவதில்லை; அரசியல்வாதிகளுக்கு நல்ல தீனி...' என, சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:
தமிழ் வளர்ச்சிக்கு, முன்னாள் முதல்வர், மறைந்த ஜெ., பல திட்டங்களை அறிவித்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றினார். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் இயல், இசை, நாடகத்துடன், அறிவியல் தமிழையும் வளர்க்க வேண்டும் என்றார். - அமைச்சர் பாண்டியராஜன்
'அவர் சொன்னது எல்லாம் சரி; செய்தீர்களா... நீங்கள் செய்தீர்களா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு:
உதவித்தொகை உயர்வு கோரி போராட்டம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகள் போராடும் இடங்களில் குடிநீர், மின்சாரம் துண்டிப்பு போன்ற செயல்களை, தமிழக அரசு செய்து வருகிறது. அதை தவிர்த்து, அந்த சங்கத்தினரை அழைத்து பேச வேண்டும். -பாலகிருஷ்ணன்
'மின்சாரம், குடிநீர் துண்டிப்பு போன்ற செயலை, தமிழக அரசு செய்யாதே...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
காவிரி, வைகை, குண்டாறு, தெற்கு வெள்ளாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் தமிழக அரசின் திட்டத்தை கர்நாடகா எதிர்க்கிறது. உபரி நீர் தேக்கி அணைகளில் வைக்க முடியாத நிலையில், கடலில் சென்று கலக்கும் நீரை தேக்கி வைத்து பயன்படுத்துவது தான், குண்டாறு திட்டத்தின் நோக்கம். இதை கர்நாடகா எதிர்ப்பது கண்டனத்துக்குரியது. - நல்லசாமி
'இதெல்லாம் தேர்தல் விவகாரம்; தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும், இந்த விவகாரம் மறைந்து விடும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விவசாயிகள் சங்க கூட்டமைப்புச் செயலர் நல்லசாமி பேட்டி:
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE