தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

தேர்தல் கூட்டணி: கமல் - சரத்குமார் பேச்சு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலை சந்தித்து, தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார்.சந்திப்புசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை
கமல், கமல்ஹாசன், சரத்குமார், சமக, மநீமை, சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மையம், பழ.கருப்பையா,

சென்னை: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலை சந்தித்து, தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார்.


சந்திப்பு



சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


latest tamil news




கூட்டணி ஏன்



இதன் பின்னர் நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது: கூட்டணி பற்றி கமலிடம் பேசினேன். நல்ல எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலிடம் பேசினேன். நல்லவர்கள் இணையலாம் என கமல் கூறியதால், சிறப்பான கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். கமலிடம் இருந்து நல்ல முடிவு வரும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். சமகவை அழைத்து அதிமுக பேசும் என காத்திருந்தோம். ஆனால் அவர்கள் பேசவில்லை. மரியாதை , விகிதாசாரம் உள்ளது என்றுதான் அதிமுக., உடன் இணைந்து பயணித்தோம். ஆனால், இப்போது இது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


கமல் கட்சியில் பழ.கருப்பையா



முன்னாள் எம்.எல்.ஏ., பழ. கருப்பையா, இன்று கமல் முன்னிலையில், மக்கள் நீதி மையத்தில் இணைந்தார். அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தேர்தலில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், மார்ச் 1ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடக்கும். மார்ச் 7 ம் தேதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.3ம் தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். இப்போது வரை நான் தான் முதல்வர் வேட்பாளர். கருணாநிதி குறித்து நான் பேசியதாக கூறுவதை, அவர் இருந்திருந்தால் அவர் புரிந்து கொண்டிருப்பார். எனவும் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
28-பிப்-202101:23:41 IST Report Abuse
Mannai Radha Krishnan இரட்டை மாட்டு வண்டியில் இனம், சுழி, பல்லு பார்த்துதான் சோடி சேர்க்கனும். இடத்து மாட்டை இடமும், வலத்து மாட்டை வலமாகவும் தான் பூட்டனும். மாத்தி பூட்டினால் இது ஒரு பக்கமும்...அது ஒரு பக்கமும் இழுக்கும். அது போல் தான் அரசியல் கட்சிகளும்....
Rate this:
Cancel
28-பிப்-202100:58:33 IST Report Abuse
ALAGAPPAN NACHIAPPAN NACHI ரெம்ப சிரம்மம் தமிழ் நாட்டு மக்கள்
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
27-பிப்-202122:31:51 IST Report Abuse
rmr ஒழுங்கா நடிக்கறத விட்டுட்டு எதுக்கு இந்த பொழப்பு நடிகர்களை இனியும் மக்கள் நம்ப போறது இல்லை என்பதே உண்மை .கமல் அரசியலுக்கு சரி பட்டு வர மாட்டார் என்பதே உண்மை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X