அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்று அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் : ஸ்டாலின் தாக்கு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
சென்னை: கடைசி நேரத்தில் முதல்வர் பழனிசாமி வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.காஞ்சிபுரத்தில், ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:சென்னை அருகே உள்ள நீர் நிலைகளையே தூர்வாரவில்லை. அப்படி இருக்கும் போது தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள்? அரசு கஜானாவை தான் அதிமுக.,வினர் தூர்வாரி
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: கடைசி நேரத்தில் முதல்வர் பழனிசாமி வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

காஞ்சிபுரத்தில், ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
சென்னை அருகே உள்ள நீர் நிலைகளையே தூர்வாரவில்லை. அப்படி இருக்கும் போது தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள்? அரசு கஜானாவை தான் அதிமுக.,வினர் தூர்வாரி உள்ளனர். மக்களின் எழுச்சியை பார்க்கும் போது, 234 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும் என நினைக்கிறேன்.

பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை மோடி வைத்துள்ளார். தமிழகத்தில் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., கூட இல்லாத பா.ஜ.,திமுகவை பலம் இழந்தது என்கிறது.சட்டசபையில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது.


latest tamil news




வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதாக அதிமுக அரசு அறிவித்து இருப்பது வெற்று அறிவிப்பு தான். இதனை நாம் தான் செயல்படுத்த உள்ளோம். கடைசி நேரத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிடுகிறார். முதல்வர் பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது.திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு உண்மையான உள் ஒதுக்கீடு அமலாகும்.

அணையும்விளக்கு பிரகாசமாக எரியும். லோக்சபா தேர்தலின் போது, விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அறிவித்த போது, மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தற்போது அல்வா கொடுத்து ஏமாற்றுகிறாரா? இவ்வாறு முதல்வர் கேள்வி எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-பிப்-202111:02:55 IST Report Abuse
அம்பி ஐயர் 1974 லருந்து மதுக்கடைகளை மூடுவோம்னு... கூவிக்கினு இருக்கானுங்க.... இன்னுமா இவுனுங்களால மூட முடியல.... திருட்டுப் பசங்க...
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
28-பிப்-202110:05:18 IST Report Abuse
jambukalyan பதவியிலிருக்கும் பழனிசாமி சொல்வதெல்லாம் வெற்று அறிவிப்புகள் என்று சொல்லும் நீ, பதவிக்கு வரும் முன்னரே பல அறிவிப்புகளை வெளியிடுகிறீரே, அதெல்லாம் வெற்று என்று உமக்குத் தோன்றவில்லையா? “அடுத்தவன் மூக்கு சுரைக்காய்போல”?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-பிப்-202105:56:53 IST Report Abuse
J.V. Iyer பலமுறை ஆண்ட திமுக மக்களுக்கு என்ன செய்திருக்கிறது? இவர்கள் வாய்ச்சவடால் அடிப்பார்கள். கடைசியில் பயன் அடைவது இவர் குடும்பமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X