கட்டுமான பூச்சு வேலையில் கவனிக்க வேண்டியவை

Added : பிப் 27, 2021
Share
Advertisement
ஒரு கட்டுமானத்திற்கு முழு வடிவம், அழகை கொடுப்பது சிமென்ட் பூச்சு தான். நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் வந்தாலும் சிமென்ட் பூசாத வெறும் செங்கல் சுவர்களையே பலரும் விரும்பி அமைப்பது இன்றைய டிரெண்டிங். எதுவாக இருந்தாலும் பூச்சு வேலையை தவிர்த்து கட்டுமானம் அமைக்க முடியாது என்பதால் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். செங்கல் சுவர் மட்டும் அமைக்க உரிய செங்கல் வாங்கி
 கட்டுமான பூச்சு வேலையில் கவனிக்க வேண்டியவை

ஒரு கட்டுமானத்திற்கு முழு வடிவம், அழகை கொடுப்பது சிமென்ட் பூச்சு தான்.

நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் வந்தாலும் சிமென்ட் பூசாத வெறும் செங்கல் சுவர்களையே பலரும் விரும்பி அமைப்பது இன்றைய டிரெண்டிங். எதுவாக இருந்தாலும் பூச்சு வேலையை தவிர்த்து கட்டுமானம் அமைக்க முடியாது என்பதால் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். செங்கல் சுவர் மட்டும் அமைக்க உரிய செங்கல் வாங்கி முறையாக வேலை செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும். மின்சார வேலைகளுக்காக செங்கல் சுவரை உடைத்து குழாய்கள் பதிக்கும் இடங்களையும் முறைப்படி அமைக்க வேண்டும். பூச்சு வேலையை உட்புற பூச்சு, வெளிப்புற பூச்சு, உட்புற கூரை பூச்சு என மூன்றாக பிரிப்பர்.

உட்புற பூச்சு வேலைக்கு சிமென்ட் மணல் கலவை 1:5 என்ற விகிதத்திலும், வெளிப்புற பூச்சு வேலைக்கு 1:6 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். உட்புற கூரை பூச்சுக்கு 1:3 என்ற விகிதத்திலும் இருக்க வேண்டும். சுவரில் ஆதார புள்ளி உட்புறம், உட்புற கூரை பூச்சுக்கும் 12 மி.மீ., கலவை கனம் இருப்பது நல்லது. வெளிப்புற பூச்சின் கனம் 16 மி.மீ., அளவு இருக்க வேண்டும். பூச்சு வேலை ஆரம்பிக்கும் முன் கனம் முடிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

டைல்ஸ் சில்லுகளை சுவரில் ஆதார புள்ளிகளாக அமைத்து சுவர் நேராக பூசுவதை உறுதி செய்து கொண்டே பணியை மேற்கொள்ள வேண்டும். கூரையின் உட்புறம் செய்யும் பூச்சு வேலையில் எந்த ஒரு ஆதார புள்ளிகளும் இல்லாமல் பூசுவது தான் வழக்கத்தில் உள்ளது. அதை தவிர்த்து முறைப்படி ஆதாரப்புள்ளி வைத்து பணிகளை செய்வது நல்லது. சுவரின் தன்மை எப்படி பூச்சு வேலை முடிவில் சுவர் தன்மை எப்படி அமைகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஸ்பான்ச் கொண்டு முடிக்கும் போது அந்த சுவர் சொரசொர தன்மையுடன் இருக்கும்.

முழுமையாக வழுவழு தன்மையை ஏற்படுத்த சிமென்ட் பவுடர் தெளித்து தேய்க்கும் வழக்கம் உள்ளது. அப்படி செய்வதால் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் பெயின்ட் பூசும் போது பட்டி பார்த்தால் சொரசொர தன்மையில் பூசுவது சரி தான். காலம், கட்டு வேலை இணைப்பு இடங்களில் பூச்சில் காலப்போக்கில் வெடிப்பு வரலாம். காலம், கட்டு வேலைகளின் வெப்பத்தால் விரிவடையும் தன்மை ஏற்பட்டு விரிசல் விழுகிறது. இது போல் வெடிப்பு ஏற்படாமல் இருக்க கோழி வலையை இணைப்பில் படிய வைத்து அதற்கு மேல் பூசலாம்.

சிமென்ட் பூச்சு தவறுகள்

சிமென்ட் கொண்டு செய்யும் அனைத்து பணிகளுக்கும் நீராட்டுதல் முக்கியமான ஒன்று. சிமென்ட் கலவையை சுவரில் முறைப்படி பூசிய பின் உலர்ந்த பின் 7 - 10 நாட்களுக்கு குறையாமல் நீராட்ட வேண்டும். எத்தனை நாள் நீராட்டுகிறோம் என்று குறித்து வைக்க வேண்டும். பூசிய பின்பு சுவரில் சுண்ணாம்பு, சாக்பீஸ் வைத்து அன்றைய தேதியை எழுதி வைக்கலாம்.ஆதார புள்ளிகள் இல்லாமல் பூச்சு வேலை செய்வது, கலவையை கூடுதல் கனத்துடன் அமைப்பது, சிமென்ட் நேரடியாக சுவரில் துாவி தேய்த்து முறைப்படுத்துவது, சரியான நீராட்டுதல் செய்யாமல் இருப்பதும் சிமென்ட் பூச்சில் வழக்கமாக செய்யும் தவறுகள் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X