சமையலறை அமைப்பும் பயன்படுத்தும் முறைகளும்| Dinamalar

சமையலறை அமைப்பும் பயன்படுத்தும் முறைகளும்

Added : பிப் 27, 2021
Share
ஒரு வீட்டின் மிக முக்கியமான அறைகளில் ஒன்று சமையலறை. இந்த அறை மட்டும் தான் அதிகம் பயன்படுத்தும் அறையாகவும் இருக்கும். இத்தனை பயனுள்ள சமயலறையை முறைப்படி அமைக்க வேண்டியது அவசியம். சமையலறை குறைந்தது 8க்கு 10 அடி இருக்க வேண்டும். பெரியதாக இருந்தால் தான் சமையல், பலசரக்கு பொருட்களை அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கலாம். சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியை ஸ்டெயின்லெஸ்
சமையலறை அமைப்பும் பயன்படுத்தும் முறைகளும்

ஒரு வீட்டின் மிக முக்கியமான அறைகளில் ஒன்று சமையலறை. இந்த அறை மட்டும் தான் அதிகம் பயன்படுத்தும் அறையாகவும் இருக்கும்.

இத்தனை பயனுள்ள சமயலறையை முறைப்படி அமைக்க வேண்டியது அவசியம். சமையலறை குறைந்தது 8க்கு 10 அடி இருக்க வேண்டும். பெரியதாக இருந்தால் தான் சமையல், பலசரக்கு பொருட்களை அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கலாம். சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் அமைப்பது நல்லது. சிமென்ட், கற்களால் அமைத்தால் தண்ணீர் எளிதில் வெளியேறாமல் தேங்கி நிற்கும்.சமையலறை மேடை உயரம் 34 அங்குலம் இருக்க வேண்டும். இது காஸ் சிலிண்டரை உள்ளே வைக்க வசதியாக இருக்கும்.

மேடைக்கு மேல் பளிங்கு கற்கள், சுவரில் டைல்ஸ் பதிக்கலாம். சமையலறை வெப்பத்தை தவிர்க்க எக்சாஸ்ட் பேன் பயன்படுத்த வேண்டும். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சமையலறையில் 5 மின் பாய்ன்ட் வைக்கலாம்.சமையலறையில் முக்கியமான பகுதி அலமாரி. உணவு பொருட்களை இங்கு வைத்து தான் நாம் எடுத்து பயன்படுத்துவோம். உணவு பொருட்கள் உள்ள இடம் என்பதால் இங்கு பூச்சிகள் வரவும் வாய்ப்புகள் அதிகம்.

இதனால் அலமாரி விரைவில் பூச்சிகளால் துளையிடப்பட்டு சேதமாகும். அதனால் அலமாரிகளின் உள் மற்றும் வெளிப்புறங்களை லேமினேட் செய்வது நல்லது.அலமாரிகளுக்கு பெயின்ட் அடிப்பதன் மூலம் பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே பெயின்ட் அடிப்பதை தவிர்த்து லேமினேட் செய்வது சிறந்தது. மாடுலர் கிச்சன்களில் பிளைவுட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படும். அந்த பிளைவுட் நீர் உறிஞ்சாத பிளைவுட்டாக இருந்தால் நீண்ட நாட்கள் உழைக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X