கனவு இல்லங்களில் கொரோனாவை விரட்டுவது எப்படி?

Added : பிப் 27, 2021
Share
Advertisement
கொரோனா காலம் நம்மை விட்டு நீங்கியதாக நினைத்து கிருமிகளை அழிக்கும் பணிகளை செய்ய தவறி விடக்கூடாது. கொரோனா இல்லை என்றாலும் பிற வகை கிருமிகளை அழிக்க நாம் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கனவு இல்லங்களில் கொரோனாவை விரட்டும் வழிமுறை குறித்து பார்க்கலாம்.கதவு கைப்பிடிகளில் கிருமிநாசினிதனி வீடுகளில் வசிப்பவர்கள் அடிக்கடி கை வைக்கும் இரும்பு கதவுகளின்
கனவு இல்லங்களில் கொரோனாவை விரட்டுவது எப்படி?

கொரோனா காலம் நம்மை விட்டு நீங்கியதாக நினைத்து கிருமிகளை அழிக்கும் பணிகளை செய்ய தவறி விடக்கூடாது. கொரோனா இல்லை என்றாலும் பிற வகை கிருமிகளை அழிக்க நாம் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கனவு இல்லங்களில் கொரோனாவை விரட்டும் வழிமுறை குறித்து பார்க்கலாம்.கதவு கைப்பிடிகளில் கிருமிநாசினிதனி வீடுகளில் வசிப்பவர்கள் அடிக்கடி கை வைக்கும் இரும்பு கதவுகளின் கைப்பிடியை வெளியே சென்று வீடு திரும்பு போது கிருமிநாசினி கொண்டு துடைக்க வேண்டும். வாரத்திற்கு இரு முறை அல்லது தினமும் வீட்டை துடைப்பது நல்லது. இதற்கு வீட்டில் வழக்கமாக பயன்படுத்தும் தரை சுத்தம் செய்யும் திரவங்கள் போதும்.

பர்னிச்சர்களின் கைப்பிடி போல் நம் அன்றாடம் அதிக நேரம் பயன்படுத்தும், தண்ணீர் பட்டால் எதுவும் ஆகாது என்ற தன்மையுள்ள பொருட்களின் மேல் ஹேண்ட் வாஷை தண்ணீருடன் கலந்து துடைக்கலாம். கிருமிநாசினி உள்ளிட்ட திரவங்களை அலைபேசியில் பயன்படுத்தினால் நீர் உள்ளே சென்று விடும் என்பதால் அதற்குரிய பிரத்யேக திரவங்களை பயன்படுத்தலாம்.

சுழற்சி முறையில் பைகள்பிளாஸ்டிக் பொருட்களில் கொரோனா அதிக நேரம் உயிர் வாழும் என்பதால் பயன்படுத்தும் முன், பின் கைகளை நன்றாக கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்க கடைக்கு செல்ல கையோடு பை எடுத்து செல்ல வேண்டும். முதல் நாள் பையை மறுநாள் எடுத்து செல்லக்கூடாது. சுழற்சி முறையில் பைகளை துவைத்து பயன்படுத்துங்கள்.

வெளியே சென்று வீடு திரும்பியதும் உடைகளை கழட்டி தனியாக வைத்து விடுங்கள் அல்லது துணி துவைக்கும் திரவம், பவுடர் கலந்த தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் துவைத்து விடுங்கள். துவைத்த துணி, பைகளை வெயிலில் நன்றாக காய வைத்து விட வேண்டும். முகக்கவசம், கர்ச்சீப் கூட நன்றாக துவைத்து பயன்படுத்த வேண்டும்.

கொரோனா தாக்கத்திற்கு பின் ஓட்டல் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள குழாய்களை முழங்கை கொண்டு திறப்பது போல் அமைத்துள்ளனர். கதவுகளை கால்கள் மூலம் திறக்கும்படி செய்துள்ளனர். இது தவிர கதவு கைப்பிடிகளை பிடித்து திறக்க, ஏ.டி.எம்., இயந்திர நம்பர் பேடை தொட்டு எண்களை அழுத்த ஆன்லைனில் பிரத்யேக கருவிகள் கிடைக்கின்றன.

கிருமி எதிர்ப்பு தன்மையுள்ள பெயின்ட்டுகள் சந்தையில் கிடைக்கிறதா என பொறியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதை பயன்படுத்தலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகளவு செலவு செய்ய வேண்டாம். வழக்கமான நடைமுறைகளை கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செய்தாலே போதும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X