அரசியல் செய்தி

தமிழ்நாடு

களைகட்டுது தமிழக தேர்தல் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இப்போதே தேர்தல் களைகட்ட துவங்கி உள்ளது. குறிப்பாக சமூகவலைதளத்தில் பல கட்சிகள் தேர்தல் பிரசாரங்களையும், பிற கட்சியினரை வசைப்பாடும் வேலைகளை துவங்கி உள்ளனர். இதனால் பல ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்., 6ல் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று நேற்று இந்திய
Tamilnadu, TNElection2021, ADMK, DMK, BJP, Rahul, Kamalhaasan, Sarathkumar,

சென்னை : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இப்போதே தேர்தல் களைகட்ட துவங்கி உள்ளது. குறிப்பாக சமூகவலைதளத்தில் பல கட்சிகள் தேர்தல் பிரசாரங்களையும், பிற கட்சியினரை வசைப்பாடும் வேலைகளை துவங்கி உள்ளனர். இதனால் பல ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்., 6ல் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் உடன் கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கும் முன்பே அதிமுக., கூட்டணி, திமுக., கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பல கட்சியினர் பிரசாரத்தை துவங்கி விட்டனர்.

அதிமுக., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ., தனியாக வேல் யாத்திரை பிரச்சாரம் செய்து வருகிறது. அதேப்போன்று அதிமுக., கட்சியும் வெற்றி_நடைபோடும்_தமிழகம் என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

திமுக., உங்கள் தொகுதியில்_ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக ஏற்கனவே ஒரு சுற்று தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். விரைவில் அடுத்தக்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறார்.latest tamil news
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பல கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை ஏற்கனவே துவக்கிவிட்டபோதிலும் தொகுதி பங்கீடு எவ்வளவு என்பதில் முடிவு எடுக்க தீவிரமாகிவிட்டன.
தமிழக தேர்தல் விஷயம், களத்தில் மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் எதிரொலிக்கிறது. பல கட்சியினரின் ஐடி விங்ஸை சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமான ஹேஷ்டாக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர்.

அதிமுக., கூட்டணியில் இருந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி திடீரென மக்கள் நீதி மையம் தலைவர் கமலை சந்தித்து பேசி உள்ளார். இது கூட்டணி தொடர்பான பேச்சு என கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் டுவிட்டரில் #KamalHaasan, #Sarathkumar என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆனது.latest tamil news


Advertisementதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து பிரச்சாரம் செய்த நிலையில் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்பி.,யுமான ராகுல் இன்று(பிப்., 27) தமிழகம் வந்துள்ளார். தூத்துக்குடி வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு அவரின் வருகை டுவிட்டரில் #Tamilnadu, #RahulAnnavinTamilvannakkam, #TNWithRahulAnna ஆகிய ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆகின.


latest tamil news
இதேப்போன்று நாம் தமிழர் கட்சியின் சீமானும் தேர்தல் பிரச்சாரத்தை சமூகவலைதளங்கள் மூலமாகவும் துவங்கி உள்ளார். அக்கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்து சில வேட்பாளர்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தையும் துவக்கி உள்ளனர். இதனால் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் #வெல்லப்போறான்விவசாயி என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆனது.


latest tamil news
இதுதவிர திமுக., இன்று மேற்கொண்டுள்ள டுவிட்டர் பிரச்சார தளத்தில் #அடிமைக்கூட்டம்_அதிமுக, #VoteForDMK என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. அதிமுக அரசு மத்திய அரசிடம் அடிமைப்பட்டு இருப்பதாக கூறி இந்த ஹேஷ்டாக்குகளை அவர்கள் டிரெண்ட் செய்கின்றனர்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
28-பிப்-202109:58:47 IST Report Abuse
Venkataramanan Thiru ஜெயலலிதா மறைவின்போது மோடிஜி சசிகலா தலைத்தொட்டு , அவரை ஜெயிலுக்கு அனுப்பினார்,இப்போது இடைப்படியின் தோளைத்தொட்டு அவரை பதவியிழக்க செய்வர் என் தோன்றுகிறது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-பிப்-202100:36:52 IST Report Abuse
M  Ramachandran சுடாலின் எது சொன்னாலும் அது அவருக்கும் பொருத்தமாக இருக்கிறது. அடிமை கூட்டம் என்கிறார்.அப்போ கருணாநிதி தன் சொந்த சுய நலத்திற்ககாக காங்கிரஸிடம் அடிமைப்பட்டு கச்சத்தீவை தாரை வார்க்க வில்லையா? இலங்கை தமிழரை கைவிட்டு காங்கிரஸுடன் கைகோர்த்து அவர்கள் அழிவுக்கு வழி வகுக்கவில்லையா? எம் ஜி ஆர் ஆவது பிரபாகரனை கூப்பிட்டு பேசி அவர்களுக்கு அப்போது நிலைமையை விளக்கி தன்னுடய நிலைப்பாட்டை விளக்கி எவ்வளவு தூரம் தன்னால் உதவமுடியுமோ அவ்வளவுக்கு உதவியும் இருந்தார். இந்த தீ மு க்கா இவ்வளவு வீரமாக பேசுகிறார்களே பின் ஏன் தன் கட்சி பாராளமன்ற உறுப்பின்னர்களை ராஜபக்த்தேயை சந்திக்க அனுப்பினார்களே. அவர்களுக்கு கொஞ்சமாவது இலங்கை தமிழர்கள் மேல் சிறிதளவு பாசமிருந்திருந்தால் கனிமொழி உள்பட அவர்கள் அளித்த விருந்தும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு பரிசுகளுடன் இஙகு சிரித்தபடி பத்திரிக்கைகளுக்கு பெ3த்தி கொடுத்தார்களே ஸ்டாலின் அவர்களே மறந்து விட்டீர்களா? மக்கள் மறக்க வில்லை. என்ன செப்டிவிதை காட்டினாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-பிப்-202119:28:22 IST Report Abuse
A.George Alphonse யாருக்குமே வெற்றிவாய்ப்போ, ஆட்சி அமைக்க மஜுரிட்டியோ கிடைக்காது தொங்கு சட்டசபை தான் அமையும்.
Rate this:
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
28-பிப்-202108:48:45 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன்உண்மை. 10 வருடங்களாக ஆட்சி செய்த அதிமுக மேல் வெறுப்பு இருந்தாலும், மக்களுக்கு திமுகவின் மேல் உள்ள வெறுப்பும் பயமும் குறையவில்லை. ஒரு புதிய கட்சி தமிழக அரசியலில் நுழைவதற்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது. நகரங்களிலும், பெண்களிடமும், படித்தவர்களிடமும், புதிய வாக்காளர்களிடமும், மக்கள் நீதி மையத்திற்கு நல்ல வரவேற்புள்ளது. மக்கள் நீதி மையம் குறைந்தது 30 சீட்டுகள் வெல்லும். பல இடங்களில் இரண்டாம் இடம் வரும். 20 சதவீத வோட்டுகளுக்கு மேல் கிடைக்கும். 30 சீட்டுகள் ஜெய்த்தாலே, தமிழக அரசியலில் மாற்றம் வந்தது போல் தான். தமிழக அரசியலின் மாற்றம் தொங்கு சட்டசபையில் இருந்து தொடங்கும்...
Rate this:
skandh - Chennai,இந்தியா
28-பிப்-202111:08:36 IST Report Abuse
skandhA.......
Rate this:
skandh - Chennai,இந்தியா
28-பிப்-202111:11:35 IST Report Abuse
skandhசந்தேகமே இல்லை.அடுத்த முதல்வர், இடப்படியார் தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X