காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது: ஆனந்த் சர்மா, கபில் சிபல் பேச்சு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
ஜம்மு: காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர்கள் கபில் சிபல், ஆனந்த் சர்மா கூறியுள்ளனர்ஜம்முவில் நடந்த ‛சாந்தி சம்மேளன்' என்ற நிகழ்ச்சியில் காங்., மூத்த தலைவர் கபில் சிபல் பேசியதாவது: காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது என்பது உண்மை. இதனால், தான் நாம் இங்கு கூடி உள்ளோம். கடந்த காலங்களிலும் நாம் ஒன்று கூடி உள்ளோம்.நாம் கட்சியை பலப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ், பலவீனம், ஆனந்த் சர்மா, கபில் சிபல், குலாம் நபி ஆசாத்

ஜம்மு: காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர்கள் கபில் சிபல், ஆனந்த் சர்மா கூறியுள்ளனர்

ஜம்முவில் நடந்த ‛சாந்தி சம்மேளன்' என்ற நிகழ்ச்சியில் காங்., மூத்த தலைவர் கபில் சிபல் பேசியதாவது: காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது என்பது உண்மை. இதனால், தான் நாம் இங்கு கூடி உள்ளோம். கடந்த காலங்களிலும் நாம் ஒன்று கூடி உள்ளோம்.


latest tamil news



நாம் கட்சியை பலப்படுத்த வேண்டும். குலாம் நபி ஆசாத்தின் பணியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். விமானத்தை அனுபவம் வாய்ந்தவரால் மட்டுமே ஓட்ட முடியும். அதில், இன்ஜினில் ஏற்படும் கோளாறை அவருடன் பயணிக்கும் பொறியாளர் மட்டுமே சரி செய்ய முடியும். குலாம் நபி ஆசாத் அனுபவம் வாய்ந்தவர். பொறியாளர் ஆவார். அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் உண்மை நிலையை தெரிந்த தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். பார்லிமென்ட் பணியில் இரந்து ஓய்வு பெற்றது அறிந்து வருத்தம் அடைந்தோம். பார்லிமெ்ன்டில் இருந்து அவர் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. அவரது அனுபவத்தை ஏன் காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்பது குறித்து தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




குலாம் நபி ஆசாத் பேசுகையில், கடந்த 5- 6 ஆண்டுகளில் பார்லிமென்டில் காஷ்மீர் விவகாரம், வேலைவாய்ப்பின்மை குறித்து அதிகம் பேசியுள்ளோம். ஜம்மு அல்லது காஷ்மீர் அல்லது லடாக் என எந்த பகுதியிலும் வசிக்கும் அனைத்து மக்கள், மதம் ஆகியவற்றை மதிக்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துகிறோம். இது தான் நமது பலம். இது தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



ஆனந்த் சர்மா பேசுகையில், 1950க்கு பிறகு, ராஜ்யசபாவில் காஷ்மீரை சேர்ந்த பிரதிநிதி யாரும் இல்லை என்ற சூழ்நிலை வந்தது இல்லை. இந்த தவறு சரி செய்ய வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. கட்சி பலமடைய வேண்டும் எனக்கருதியே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அனைத்து மட்டத்திலும் கட்சி பலப்பட வேண்டும். புதிய தலைமுறையுடன் கட்சி தொடர்பு கொள்ள வேண்டும். காங்கிரசின் நல்ல காலத்தை பார்த்து உள்ளோம். நாம் வயதாகும் போது கட்சி பலவீனம் அடைவதை பார்க்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
27-பிப்-202121:34:02 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy காங்கிரஸ் உண்மை நிலையை தெரிந்த தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். தீய மு க வுடன் , கட்டுமரத்துடன் நன்றாக பேசி சீட் வாங்கியவர். ஆனால் கொங்கிரஸ் பாரம்பரியம் தெரிந்தது தான். காமராஜ் போன்ற பெரிய ஆளுமைகளையே தூக்கி கடாசிய கட்சி தலைமை... விளைவு வீழ்ச்சி மட்டும் தான்...தற்போதைய புதிய தலைமுறை ஜோதிமணி போன்ற கல் ஏறி விசுவாசிகள் தான் , உருப்படுமா காங்கிரஸ் நிச்சயம் இல்லை
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
27-பிப்-202121:27:29 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy ராகுல் ஒரு குழந்தை, இன்றய தூத்துகுடி கூட்டத்தில் சம்பந்தம் இல்லாமல் பேசியதில் இருந்து புரிந்தது... வடக்கே காஷ்மீரில் பெரியவர்களின் கட்சி பலவீனம் அடைவதை பார்க்க விரும்பவில்லை என்ற புலம்பல் வேறு. ஒரே நாளில் இரண்டும் கூத்தாக உள்ளது. காங்கிரஸ் திசை தெரியாமல் பயணிக்கும் , முழுகும் கப்பல்.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
27-பிப்-202121:20:20 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy சிவகங்கை சீமை பசி ராகுகாலத்தோடும் காணோம். அறிவாலயத்தில் பேச்சு நடத்தவும் காணோம். ( ரைடு விட்டு 61 சீட் வாங்கிய அனுபவம் மிக்கவர் ). காஷ்மீர் கூட்டத்திலும் காணோம். ... எங்கு போனார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X