பொது செய்தி

இந்தியா

பொம்மைகள் தயாரிப்பில் பிளாஸ்டிக்கை குறைக்க பிரதமர் வேண்டுகோள்

Added : பிப் 27, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: பொம்மைகள் தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்திய பொம்மை கண்காட்சியை வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: பொம்மைகள் உற்பத்தி துறையில் நாமே சொந்தமாக பொம்மைகளை உருவாக்கி தன்னிறைவு பெற வேண்டும். சர்வதேச பொம்மை சந்தையிலும்
பொம்மை, பிரதமர் மோடி, பிளாஸ்டிக்,  நரேந்திர மோடி, வேண்டுகோள்

புதுடில்லி: பொம்மைகள் தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பொம்மை கண்காட்சியை வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: பொம்மைகள் உற்பத்தி துறையில் நாமே சொந்தமாக பொம்மைகளை உருவாக்கி தன்னிறைவு பெற வேண்டும். சர்வதேச பொம்மை சந்தையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 100 பில்லியன் டாலர்கள் கொண்ட சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது. நம் நாட்டில் விற்கும் பொம்மைகளில் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டவை. இந்தியாவில் கைவினை கலைகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பொம்மை உற்பத்தியாளர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொம்மைகளை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வைத்து பொம்மைகள் தயாரிக்கப்பட வேண்டும்.


latest tamil news




இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் மறுசுற்சி செய்யக்கூடியவை; மறு பயன்பாடு செய்யப்படக்கூடியவை. இவை நமது வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக இருந்தது. பெரும்பாலான இந்திய பொம்மைகள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகுந்த பொருட்கள் மூலம் உருவாக்கப்படுபவை. இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் இயற்கையானவை மற்றும் பாதுகாப்பானது, இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
28-பிப்-202107:59:10 IST Report Abuse
தல புராணம் பொம்மைகள் தயாரிப்பில் பிளாஸ்டிக்கை குறைக்க வேண்டுகோள் இன்னிக்கி இதை சொல்லிட்டு நாளக்கி அதுக்கு ஜிஎஸ்டி வரியை ஏத்துவாரு இவரு..
Rate this:
Cancel
28-பிப்-202103:55:31 IST Report Abuse
ஆப்பு சீனாவிலிருந்து ப்ளாஸ்டிக் பொம்மை இறக்குமதியைத் தடை செய்ய மாட்டாராம். நமக்கு அறிவுரை, உபதேசம் எல்லாம் குடுப்பாராம். ஆத்மநிர்பரா ஜிந்தாபாத்.
Rate this:
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
28-பிப்-202111:35:10 IST Report Abuse
Sankar Ramuஉற்பத்தி பண்ணாம இறக்குமதியை தடை செய்தா அப்புறம் விலை ஏறிடாதா ?...
Rate this:
Cancel
28-பிப்-202103:52:52 IST Report Abuse
ஆப்பு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தான் இவிங்களுக்குத் தேவை. தமிழ்நாட்டில் நிறைய இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X