சென்னை புத்தகத்திருவிழாவில்..| Dinamalar

சென்னை புத்தகத்திருவிழாவில்..

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னையில் நடைபெறும் ஆரோக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் புத்தகத் திருவிழாகடந்த டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய இந்த 44 வது ஆண்டு புத்தக திருவிழா, கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடந்து வருகிறது.இந்தக் கண்காட்சியை நடத்துவதற்காக ஏற்பட்டாளர்கள் பெரிதும் பாடுபட்டு இருக்கின்றனர் என்பதை அங்கு சென்ற பிறகு உணரமுடிகிறது.அவற்றில் ஒன்று கொரோனாlatest tamil news


சென்னையில் நடைபெறும் ஆரோக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் புத்தகத் திருவிழா
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய இந்த 44 வது ஆண்டு புத்தக திருவிழா, கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடந்து வருகிறது.


latest tamil news


இந்தக் கண்காட்சியை நடத்துவதற்காக ஏற்பட்டாளர்கள் பெரிதும் பாடுபட்டு இருக்கின்றனர் என்பதை அங்கு சென்ற பிறகு உணரமுடிகிறது.அவற்றில் ஒன்று கொரோனா காரணமாக மக்கள் இடித்துக் கொண்டு நடக்கக்கூடாது என்பதற்காக அரங்கத்தின் உள்ளே உள்ள நடைபாதையை விசாலப்படுத்தியுள்ளனர்.534 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.நிறைய புது வரவுகள் உள்ளன.


latest tamil news


Advertisement

இது போன்ற நல்ல விஷயத்திற்கு மகத்தான ஆதரவை தரும் நமது தினமலர் இங்கும் ஒரு அழகிய வரவேற்பு வளைவு வைத்திருப்பதுடன், 238,239 ஆகிய ஸ்டால்களில் வாரமலர் அந்துமணியின் புத்தகங்கள் உள்ளீட்ட பல தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.கண்காட்சியை துவக்கி வைக்க வருகைதந்த துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அந்துமணியின் புத்தகங்களை நிறைய வாங்கிச் சென்றார்.


latest tamil news


மற்ற ஸ்டால்களை விட தினமலர் அரங்கில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது, இங்குள்ள புத்தகங்களில் இந்த வருடம் நான் எழுதிய, ‛எப்போதும் எம்.ஜி.ஆர்'.,புத்தகமும் உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


latest tamil news


எல்லோருடைய உதடுகளிலும் இப்போது உச்சரிக்கப்படும் எம்.ஜி.ஆர்.,ஆட்சியில் என்ன நடந்தது என்பதை அபூர்வ படங்களுடன் சொல்லும் புத்தகம் இது.


latest tamil news


வழக்கமான தள்ளுபடியுடன் சில அரங்குளில் கூடுதல் தள்ளுபடியும் வழங்குகின்றனர்.உள்ளேயே ஏடிஎம் சென்டர் இருக்கிறது,நீங்கள் உங்கள் வாகனத்தை நிறுத்திய இடத்தில் இருந்து கண்காட்சிக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வருவதற்கு இலவச வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளனர்,அனுமதிக்கட்டணமாக நீங்கள் வாங்கும் பத்து ரூபாய் சீட்டிற்கு குலுக்கல் முறையில் மதிப்பு மிக்க புத்தகங்களை பரிசாக வழங்குகின்றனர்.
குழந்தைகளோடும் குதுாகலத்தோடும் சென்று வர வேண்டிய புத்தக திருவிழா வருகின்ற மார்ச் மாதம் 9 ந்தேதி வரை நடைபெற உள்ளது.
-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X