அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறைந்த எண்ணிக்கையை பெற்றுள்ளோம்: அன்புமணி

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை:வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை பெற்றுள்ளதால் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்றுள்ளோம் என பா.ம.கவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ரரமதாஸ் கூறி உள்ளார். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டது.இதையடுத்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.,கூட்டணி மிகப்பெரிய

சென்னை:வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை பெற்றுள்ளதால் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்றுள்ளோம் என பா.ம.கவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ரரமதாஸ் கூறி உள்ளார்.



latest tamil news



அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டது.இதையடுத்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.,கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்.வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியதாலும், 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாலும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைவாக பெற்றுள்ளோம் என்றார்.


latest tamil news




20 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி



பா.ம.க., கடந்த 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது .தற்போது நடைபெற உள்ள 2021 ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க., அணியில் பா.ம.க., இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.V.N.Jothi - பொதட்டூர்பேட்டை,இந்தியா
28-பிப்-202115:11:33 IST Report Abuse
Dr.V.N.Jothi அரசியல் தலைவர்கள் மகிழ்ச்சிக்கு ஸ்வீட் பாக்ஸ் கூட்டணியை தீர்மானிக்க அன்றாட வாழ்வில் போராடிக்கொண்டுள்ள மக்கள் நிலைமையை யோசிக்க ஆள்இல்லாமல் போனது அவர்கள் ஓட்டு மட்டும் இவர்களுக்கு தேவை ஆனால் அவர்கள் கஷ்டங்கள் இவர்களுக்கு துச்சம். இப்படிபட்ட சமுதாய ஏற்றதாழ்வுகளை ஒருபோதும் மண்ணில் வராமல் இருந்தால் அதுதான் சொர்க்கம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-பிப்-202109:59:28 IST Report Abuse
RajanRajan தனித்து போட்டியிட்டு தான் பார்க்கிறது. குதிரை பேரத்திலாச்சும் ஏதாவது தேறுமான்னு பார்க்கலாமே
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
28-பிப்-202109:44:08 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இதே கட்சியுடன் (வன்முறை கும்பல் என்று சொல்வது சாலப்பொருத்துமோ?), டீம்கா பல தேர்தல்களில் சேர்ந்து கும்மியடிச்சதை டீம்கா அல்லக்கைஸ் வசதியாக மறந்து கருத்து போடுறானுங்க காமெடி பாய்ஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X