அறிவியல் ஆயிரம்
பத்தில் ஒருவர்
கொரோனா பாதித்தவருடன் வீட்டில் வசிப்பவருக்கு கொரோனா பரவுவதற்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதாவது பத்தில் ஒருவருக்கு தான் பரவுகிறது என அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 7 ஆயிரம் வீடுகளில் வசிக்கும் 25 ஆயிரம் பேரிடம் 2020 மார்ச் 4 முதல் மே 17 வரை ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 7262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மூலம் அவர்களுடன் வீட்டில் தங்கியிருந்த வர்களில் 1809 பேருக்கு மட்டுமே கொரோனா பரவியது. இது 10.1 சதவீதம்.
தகவல் சுரங்கம்
தேசிய அறிவியல் தினம்
அறிவியலின் வியத்தகு கண்டுபிடிப்புகளால் தான் உலகம் பல துறைகளிலும் முன்னேறி யுள்ளது. தமிழக விஞ்ஞானி சி.வி.ராமன், 'ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ல் கண்டுபிடித்தார். இந்நாளே தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது.அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என கண்டுபிடித்தார். இதற்காக 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE