புதுடில்லி: தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்தில் கோவிட் 19 தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதனை தடுக்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருந்துகளை கண்டறிவதில் தீவிரம் காட்டி வந்தன. கடந்த 42 தினங்களுக்கு முன்னர் இதற்கான மருந்து தீவிர பரிசோதனைகளுக்கு பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் இம்மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் விரைவில் மூத்த குடிமக்களுக்கு இந்தமருந்து வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.மேலும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி மருந்து பெற்றுக்கொள்ளவது குறித்தும் அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வந்தது
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாவது: தனியார்மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து சேவை வரியான ரூ.100 உட்பட ரூ.250க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 3-முதல் நான்கு நாட்களில் கட்டண தொகை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.37 கோடியை தாண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE