நாய்களை கண்டுபிடிக்க அரை மில்லியன் டாலர்: பாப் பாடகி அறிவிப்பு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஸ்டீபனி ஜான் ஏஞ்சலினா ஜெர்மன்நோட்டா என்ற இயற்பெயர் கொண்ட 34 வயதான பிரபல அமெரிக்க பாடகி, நடிகை லேடி காகா. உலக அளவில் ஜஸ்டின் பீபர், சை, ஏகான், உள்ளிட்ட பாடகர்கள் பிரபலமடைந்துவரும் நிலையில் மடோனா, ஜெனிபர் லோபஸ் ஆகியோரை அடுத்து உலக அளவில் பிரபலம் அடைந்த பாப் பாடகி லேடி காகா. இவருக்கு இந்தியாவிலும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. சமீபத்தில்

ஸ்டீபனி ஜான் ஏஞ்சலினா ஜெர்மன்நோட்டா என்ற இயற்பெயர் கொண்ட 34 வயதான பிரபல அமெரிக்க பாடகி, நடிகை லேடி காகா. உலக அளவில் ஜஸ்டின் பீபர், சை, ஏகான், உள்ளிட்ட பாடகர்கள் பிரபலமடைந்துவரும் நிலையில் மடோனா, ஜெனிபர் லோபஸ் ஆகியோரை அடுத்து உலக அளவில் பிரபலம் அடைந்த பாப் பாடகி லேடி காகா. இவருக்கு இந்தியாவிலும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.



latest tamil news



சமீபத்தில் இவர் இவர் செல்லமாக வளர்த்த இரண்டு ஃபிரஞ்சு புல்டாக் ரக நாய்கள் கடத்தப்பட்டன. இவை தற்போது போலீஸாரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளன. நாய்களை பறிகொடுத்த காகா, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
'கோஜி, கஸ்டவ் ஆகிய எனது இரண்டு செல்ல நாய் குட்டிகளும் அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் காணாமல் போயின. இவற்றை கண்டுபிடித்து தருபவருக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு தொகை அளிக்க நான் தயாராக உள்ளேன்'
இவ்வாறு லேடி காகா தனது டிவிட்டர் பக்கத்தில் தனது நாய்கள் காணாமல் போனதை அடுத்து பதிவு ஒன்றை இட்டிருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.
நாய்களில் பிரெஞ்சு புல்டாக் அதிகமாக கடத்தப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் இவை மிகவும் அரிதான உயிரினங்கள். இதனால் இவற்றை அதிக விலை கொடுத்து வாங்க பணக்காரர்கள் முண்டியடிப்பர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலஸ் சேர்ந்த நாய் கடத்தல் கும்பல் கோஜி, கெஸ்டவ் ஆகிய இரண்டு நாய்களையும் கடத்தியிருக்கலாம் என சந்தேகப்பட்ட அமெரிக்க போலீசார் அப்பகுதியில் தேடுதலை துவங்கினார்.


latest tamil news


அப்போது மூன்று ஃபிரஞ்சு புல்டாகுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை கடத்திய திருடர்கள் தப்பி ஓடினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டு செல்லப்பிராணிகள் கிடைத்ததில் காகா மிக்க மகிழ்ச்சி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-பிப்-202108:58:34 IST Report Abuse
kulandhai Kannan அந்த நாயிடம் ஏதோ விசேஷ திறமை இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
28-பிப்-202108:55:23 IST Report Abuse
 Muruga Vel நடிகையை விட்டு நாயே விலகி போவது என்னமோ மாதிரி இருக்கே
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
28-பிப்-202106:32:41 IST Report Abuse
 Muruga Vel அமெரிக்கர்களின் நாய் மோகம் அலாதியானது ..எந்த நாய்க்குட்டிகளும் குரைப்பதில்லை .. கழுத்தில் போடப்படும் எலக்ட்ரானிக் பட்டைகள் நாய் குறைத்தால் எலெக்ட்ரிக் ஷாக் அடிக்கும் வகையில் இருப்பதால் குறைப்பதையே மறந்து விட்டன..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X