கொரோனா தடுப்பூசி நன்கொடை; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கவுதமாலா அதிபர்

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கவுதமாலா சிட்டி:2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்த இந்தியாவுக்கு கவுதமாலா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.நாட்டில் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியிலிருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியானது தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி

கவுதமாலா சிட்டி:2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்த இந்தியாவுக்கு கவுதமாலா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.



latest tamil news




நாட்டில் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியிலிருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியானது தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று காலை வரையில், 1,42,42,547 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.


2 லட்சம் தடுப்பூசிகள்


இந்தியாவில் உற்பத்தியான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் இலங்கை, மாலத்தீவு, நேபாளம், ஆப்கன் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கவுதமாலா நாட்டுக்கும் இந்தியா சார்பில் தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்நாட்டின் தேவைக்காக 2 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.


latest tamil news



இதனை பெற்று கொண்டு கவுதமாலா அதிபர் அலிஜாண்ட்ரோ கியாம்மட்டெய் கூறியதாவது, கொரோனா தடுப்பு மருந்துகளை வினியோகித்து உதவி புரிந்ததற்காக இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
இந்தியா தடுப்பு மருந்துகளை எங்களுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை நன்கொடையாக வழங்கி உள்ளது. முன்கள சுகாதார பணியாளர்கள் நோயெதிர்ப்பு சக்தி பெற அவை பெரிதும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
28-பிப்-202108:50:51 IST Report Abuse
 Muruga Vel நன்றி சொல்வதாக அறிவித்தவர்களுக்கு மட்டும் நண்கொடையா ..
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-பிப்-202121:53:23 IST Report Abuse
A.George Alphonse அயல் நாடுகளுக்கு இந்த காரோண தடுப்பூசி நன் கொடையாக அனுப்பிவைக்கபடுகிறது.ஆனால் நாம்மட்டும் ருபாய் 250/- கொடுத்து தனியார் மருத்துவ மனையில் தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும்.
Rate this:
28-பிப்-202110:28:34 IST Report Abuse
ஆரூர் ரங்உங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாகப் போட்டுக் கொள்வது கவ்ரவக்☹ குறைச்சல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X