பொது செய்தி

இந்தியா

'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்'

Added : பிப் 27, 2021
Share
Advertisement
உதம்பூர்:“ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுவரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது,” என, வடக்கு பிராந்திய தளபதி ஜோஷி கூறினார்.ஒப்பந்தம்ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின், வடக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, நேற்று
 'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்'

உதம்பூர்:“ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுவரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது,” என, வடக்கு பிராந்திய தளபதி ஜோஷி கூறினார்.


ஒப்பந்தம்

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின், வடக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:சமீபத்தில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும், ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குனர்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், கடந்த, 25ம் தேதி முதல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடப்பதாக இருதரப்பும் உறுதி அளித்தன.

எனினும், நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.அது தொடர்ந்து நடக்கும். நாங்கள், யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில், முழு எச்சரிக்கையுடன் இருப்போம்.

அண்டை நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, நம் ராணுவ வீரர்கள், நம் நாட்டை பாதுகாத்து வருகின்றனர். அது, வரும் காலங்களிலும் தொடரும். துணிச்சல்பாதுகாப்பு அரணாக இருக்கும் ராணுவ வீரர்கள், நம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்போருக்கு, தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

எல்லையில், இக்கட்டான சூழல் நிலவியபோது, திறமையுடன் செயல்பட்ட நம் வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைகள், இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X