பொது செய்தி

இந்தியா

'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்'

Added : பிப் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:''பொம்மைகள் தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்,'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நாட்டின், முதல் இந்திய பொம்மை கண்காட்சி, நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி, மார்ச், 2 வரை நடக்கிறது. 'வீடியோ கான்பரன்ஸ்'மின் வர்த்தக வசதியுடன் கூடிய, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடக்கும் இந்தக்
 'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்'

புதுடில்லி:''பொம்மைகள் தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்,'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின், முதல் இந்திய பொம்மை கண்காட்சி, நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி, மார்ச், 2 வரை நடக்கிறது. 'வீடியோ கான்பரன்ஸ்'மின் வர்த்தக வசதியுடன் கூடிய, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடக்கும் இந்தக் கண்காட்சியில், 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 1,000க்கும் அதிகமானோர், தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதில், பாரம்பரிய இந்திய பொம்மைகளுடன், மின்சார பொம்மைகள் போன்ற, நவீன பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை, வீடியோ கான்பரன்ஸ் வழியாக துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள், நம் வாழ்க்கை முறையில் ஓர் அங்கமாக இருந்த பெரும்பாலான இந்திய பொம்மைகள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகுந்த பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டன. இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் இயற்கையானதாகவும் பாதுகாப்பாகவும் இருந்தன.


தன்னிறைவு



இப்போது, பொம்மைகள் தயாரிப்பில் நாம் பின்தங்கி விட்டோம். சர்வதேச பொம்மை சந்தையில், நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய சர்வதேச சந்தையில், இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது. பொம்மைகள் உற்பத்தி துறையில், நாமே சொந்தமாக பொம்மைகளை தயாரித்து, தன்னிறைவு பெற வேண்டும்.

நம் நாட்டில் விற்கும் பொம்மைகளில், 85 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டவை. இந்தியாவில், கைவினை கலைகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொம்மைகளை தயாரிக்க வேண்டும் என, பொம்மை தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வைத்து, பொம்மைகளை தயாரிக்க வேண்டும்.


பாரம்பரியம்

கவர்ச்சிகரமான, புத்தாக்க பொம்மைகளை, மறு சுழற்சி செய்ய கூடிய பொருட்களைக் கொண்டு உருவாக்க வேண்டும். இந்திய பொம்மைகள் சந்தை பாரம்பரியம், தொழில்நுட்பம், கருத்துருக்கள் மற்றும் திறமையைக் கொண்டது. நம்மால், உலகத்துக்கும், சூழலுக்கும் உகந்த பொம்மைகளை அளிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
28-பிப்-202108:48:02 IST Report Abuse
natarajan s ராஜஸ்தான் மாநில பொம்மைகள் அந்த மக்களின் கலாச்சார பிரதிபலிப்புகளுடன் இருக்கும். முதல் முறையாக பொம்மை தயாரிப்பை ஊக்கப்படுத்த நடவடிக்கை இது , இதில் ஈடு பட்டு உள்ளவர்களின் வாழ்வு வழிபடும் என்று எதிர் பார்க்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X