வடமாநில தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை!

Updated : மார் 01, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும், விரைவில் கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து, பிரசாரத்தை துவக்க உள்ளன. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, தேசிய கட்சிகளைச் சேர்ந்த, வட மாநில தலைவர்கள், தமிழகத்திற்கு மீண்டும் வருகை தர உள்ளனர். நேற்று, காங்., முன்னாள் தலைவர் ராகுல், தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். இன்று, மத்திய உள்துறை
வடமாநில தலைவர்கள், தமிழகம், வருகை, பிரதமர் மோடி, அமித்ஷா, உள்துறை அமைச்சர், காங்கிரஸ், பாஜ, ராகுல்,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும், விரைவில் கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து, பிரசாரத்தை துவக்க உள்ளன. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, தேசிய கட்சிகளைச் சேர்ந்த, வட மாநில தலைவர்கள், தமிழகத்திற்கு மீண்டும் வருகை தர உள்ளனர்.


நேற்று, காங்., முன்னாள் தலைவர் ராகுல், தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கான பொதுத் தேர்தல், ஏப்., 6ம் தேதி நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மார்ச் 12ல் வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளது.


வேட்பாளர் பட்டியல்



எனவே, கூட்டணி தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டிய நிலைக்கு, கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.தற்போதைய நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூனிஸ்ட் - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இரு கூட்டணியிலும், தொகுதி பங்கீடு பேச்சு, நேற்று முதல் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால், கட்சிகள் இடம் மாறவும், புதிய கட்சிகள் உள்ளே வரவும் வாய்ப்புகள் உள்ளன.



சட்டசபையில் தற்போது, பா.ஜ.,விற்கு, ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை. எனவே, வரும் தேர்தலில், இரட்டை இலக்கத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது, பா.ஜ.,வின் இலக்காகும். அதற்காக, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பா.ஜ., வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, வட மாநில தலைவர்கள் அனைவரையும் தமிழகத்திற்கு அனுப்ப, அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்களாக, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக, சி.டி.ரவி, இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


ஆலோசனை


இவர்கள், தமிழகத்தில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று சென்னை வந்தார்; இன்று காலை, காரைக்கால் செல்கிறார். அங்கு, பா.ஜ., நிர்வாகிகளுடன், புதுச்சேரி கள நிலவரம் குறித்து, ஆலோசனை நடத்த உள்ளார். மதியம், விழுப்புரம் வருகிறார். மாநில மையக்குழு கூட்டத்தில், தொகுதி பங்கீடு குறித்து பேசுகிறார். மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, பிரசாரம் செய்ய உள்ளார்.

இன்று மாலை, டில்லி திரும்பும் அவர், மீண்டும் தமிழகம் வர உள்ளார். அதேபோல, பிரதமர் மோடியும், மீண்டும் தமிழகம் வர உள்ளார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர், நிதின் கட்கரி, ஜெய்சங்கர், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு தலைவர்கள், தமிழகத்தில் பிரசாரம் செய்ய வர உள்ளனர்.


மூன்றாம் கட்டம்


தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்காக, அக்கட்சி முன்னாள் தேசிய தலைவர் ராகுல், ஏற்கனவே இரு முறை தமிழகம் வந்து பிரசாரம் செய்தார். மூன்றாம் கட்டமாக, நேற்று துாத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் பிரசாரம் செய்தார். மேலும், காங்கிரஸ் சார்பில், ராகுலின் சகோதரி பிரியங்கா, காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பல்லம் ராஜு, பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களும், தமிழகம் வர உள்ளனர்.


வாய்ப்பு


மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில், அக்கட்சி தேசிய தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத்; இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், டி.ராஜா, சுதாகர் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி போன்றோரும், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வர வாய்ப்புள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sowli - chennai,இந்தியா
28-பிப்-202120:55:41 IST Report Abuse
sowli அமித் ஷா வட மாநில தலைவர் இல்லை. இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-பிப்-202118:14:37 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்திற்கு வடமாநில தலைவர்கள் வருகையால் பயன் அடைவது பாஜகதான். ராகுல்ஜியின் வருகை பாஜகவின் வளர்ச்சியை தமிழ் நாட்டில் பெருகச்செய்யும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-பிப்-202106:12:09 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்திற்கு வரும் பாஜக பிரமுகர்களைவிட, ராகுல்ஜிதான் பாஜக கட்சிக்கு அதிக ஓட்டுக்கள் வாங்கி தருவார். ராகுல் நிறைய பேசவேண்டும். பேசுங்கள் ராகுல்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X