பூக்கள் அற்ற தேசத்தில்உன் பாதச்சுவடுகளைவிதைத்து விட்டுப் போ...பட்டாம் பூச்சிகள் பசியாறட்டும்!இப்படி, பூக்களின் மேல் படிந்து இருக்கும் சிறு பனித்துளிகள் போல, சின்னச் சின்ன காதல் கவிதைகளை எழுதி இருக்கிறார் கவிஞர் அன்புசிவா.
இவர், ஒவ்வொரு ஆண்டும், பிப்., 14ம் தேதி காதலர் தினத்தன்று ஒரு கவிதை நுாலை எழுதி வெளியிட்டு வருகிறார். கடந்த, 14 ஆண்டுகளில், 14 காதல் கவிதை நுால்களை வெளியிட்டு இருக்கிறார். இவ்வாண்டு, 'உன் அழகின் கீழ் படிந்த மாணவன்' என்ற நுாலை வெளியிட்டுள்ளார்.
''காதல் பற்றி கவிதை எழுதப்பிடிக்கும். ஆனால், எனக்கு காதலித்த அனுபவம் இல்லை. வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான், திருமணம் செய்து இருக்கிறேன். காதல் கவிதைகள் எழுத, காதல் அனுபவம் அவசியமில்லை.காதலை பற்றி கவிதைகள் எழுதாத கவிஞர்களே இல்லை. அவர்கள் எல்லோருக்கும் காதல் அனுபவம் இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்த உணர்வுகள், அவர்களின் மனதுக்குள் இருந்திருக்கும்,'' என்கிறார் அன்புசிவா.
''சரி...இப்போதெல்லாம் உண்மையான காதல் எங்கே இருக்கிறது,''''ஒரு ஆணும், பெண்ணும் அன்பை பரிமாறிக்கொள்ளும், உன்னதமான உணர்வுதான் காதல். அதை கவிதையாக எழுதும்போது, இலக்கியமாகி விடுகிறது. சங்க இலக்கியங்களில் உள்ள, அகநானுாறு பாடல்கள் எல்லாம் அதையே பதிவு செய்துள்ளன. நமது பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்கும் மேலை நாட்டு காதலை, வரவேற்கக்கூடாது. அன்பையும், பாசத்தையும் வளர்க்கும் இயற்கையான நமக்கு காதல் தேவை,'' என்கிறார் இவர்.பெயரிலேயே அன்பை வைத்திருக்கும், சிவாவின் காதல் பற்றிய பார்வை சரியாக தானிருக்கும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE