பொது செய்தி

இந்தியா

பி.எஸ்.எல்.வி., - சி51 ராக்கெட் இன்று பாய்கிறது

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஸ்ரீஹரிகோட்டா ;இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1' உள்ளிட்ட 19 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது.இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இன்று 59வது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10:24 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. 'நியூ ஸ்பேஸ்
 பி.எஸ்.எல்.வி., - சி51 ராக்கெட் இன்று பாய்கிறது


ஸ்ரீஹரிகோட்டா ;இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1' உள்ளிட்ட 19 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது.இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இன்று 59வது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10:24 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.


'நியூ ஸ்பேஸ் இந்தியா


latest tamil news



இதற்கான 'கவுன்ட் டவுன்' நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது.பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் 'அமேசோனியா - 1' செயற்கைக் கோள் ஏவப்படுகிறது. இத்துடன் பல்வேறு ஆய்வுகளுக்காக 18 சிறிய செயற்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இஸ்ரோ வணிக ரீதியிலான விண்வெளி நடவடிக்கைகளுக்கு 'நியூ ஸ்பேஸ் இந்தியா' என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிறுவனம் மூலம் இஸ்ரோ முதன் முதலாக வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி.- சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
28-பிப்-202115:59:29 IST Report Abuse
Loganathan Kuttuva அந்நிய செலாவணியை ஈட்டுகிறது .
Rate this:
Cancel
unmaimani - chennai,இந்தியா
28-பிப்-202114:27:46 IST Report Abuse
unmaimani எப்போ பார்த்தாலும் இந்த பி எஸ் எல் வி தான? அமெரிக்கா, ரஷ்யா, சீனா இவங்களை பாருங்க பாஸ். அவங்களுக்கும் எவ்வளோ முன்னாடி போய்ட்டாங்க. இன்னும் நாம் பழைய TVS மாதிரி இதையே எல்லாத்துக்கும் பயன் படுத்திறோம்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
28-பிப்-202111:08:13 IST Report Abuse
SUBBU PSLV-C51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டுவிட்டது.இதனுடன் இந்தியாவின் 5 செ.கோள், அமெரிக்காவின் நானோ 13 செ.கோள், பிரேஸிலின் 634 கிலோ எடை கொண்ட அமேசானியா உட்டபட மொத்தம் 19 செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது ISRO.இதன் மொத்த எடை கிட்டத்தட்ட ஐந்து டன்னுக்கு மேல் இருக்கும்.இந்தியாவின் இந்த சாதனையை பார்த்து இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமையடைவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X