சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்உரிமையாளரின் உயிரைக் குடித்த சண்டை சேவல்ஐதராபாத்: தெலுங்கானாவில், சேவல் சண்டைக்கு தயார் படுத்தப்பட்ட சேவல் தாக்கியதில், அதன் உரிமை யாளர் உயிரிழந்தார்.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு


இந்திய நிகழ்வுகள்உரிமையாளரின் உயிரைக் குடித்த சண்டை சேவல்

ஐதராபாத்: தெலுங்கானாவில், சேவல் சண்டைக்கு தயார் படுத்தப்பட்ட சேவல் தாக்கியதில், அதன் உரிமை யாளர் உயிரிழந்தார்.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.சில தினங்களுக்கு முன், அந்த சேவல் சண்டை நடந்தது. அதில் பங்கேற்ற சேவல் ஒன்றின் காலில், கூர்மையான கத்திகள் கட்டப்பட்டிருந்தன. போட்டிக்கு தயார்படுத்தப்பட்டபோது, அந்த சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது.latest tamil news
அதை, உரிமையாளர் பிடிக்கவே, அந்த சேவல் தன் கால்களால், அவரை தாக்கியது. அப்போது, காலில் கட்டப்பட்டிருந்த கத்தி, அவரின் இடுப்பை பதம் பார்த்தது.படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் உயிரிழந்தார்.உயிரிழந்த நபர், அந்த சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பது தெரியவந்து உள்ளது. சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள, 15 பேரை தேடும் பணிகளில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

ராஜஸ்தானில் சுரங்கம் தோண்டி வெள்ளிக் கட்டிகள் கொள்ளை

ஜெய்ப்பூர்; ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போல, ராஜஸ்தானில், சுரங்கம் தோண்டி, ஒரு டாக்டரின் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான, வெள்ளிக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர், அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. மூன்று பெட்டிஇங்கு, தலைநகர், ஜெய்ப்பூரில், டாக்டர் சுனித் சோனி என்பவர், தன் வீட்டு கீழ்தளத்தில், பூமிக்கு அடியில் மறைத்து வைத்திருந்த வெள்ளிக் கட்டிகள் கொள்ளையடிக்கப் பட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர், அஜய்பால் லம்பா கூறியதாவது:சுனித் சோனியிடம் வெள்ளிக் கட்டிகள் இருப்பது, அவரது நண்பர் ஒருவருக்கு மட்டுமே தெரியும். அந்த நண்பர், கடந்த மாதம், சுனித் சோனியின் பக்கத்து வீட்டை, 87 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அதன் பின், தகரத்தில் தடுப்பு போட்டு மறைத்து விட்டு, 20 அடி நீளம், 15 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டி, சுனித் சோனி புதைத்து வைத்திருந்த பெட்டியில் இருந்து, வெள்ளிக் கட்டிகளை கொள்ளையடித்துள்ளார். ஒருநாள், சுனித் சோனி, கீழ் தளத்திற்கு சென்ற போது, தரை சமமின்றி இருந்ததால் சந்தேகப்பட்டு தோண்டிய போது, வெள்ளிக் கட்டிகள் காணாமல் போனது தெரியவந்தது.


தமிழக நிகழ்வுகள்பைக் மீது டாடா ஏஸ் மோதல் தனியார் கம்பெனி ஊழியர் பலி..

வானுார் - பைக்கில் சென்ற தனியார் கம்பெனி ஊழியர், டாடா ஏஸ் வாகனம் மோதி இறந்தார்.வானுார் அடுத்த இளவம்பட்டு புதுகாலனியை சேர்ந்தவர் முருகேசன் மகன் சிவக்குமார்,41; சேதராப்பட்டில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வேலை முடிந்த பின் பிஒய்.01.ஏவி.6797 பதிவெண் கொண்ட பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார்.கரசானுார் சந்திப்பு அருகே வந்தபோது, மயிலத்தில் இருந்து சேதராப்பட்டு நோக்கி வந்த டிஎன்.07.பிஎக்ஸ்.4349 பதிவெண் கொண்ட டாடா ஏஸ், பைக் மீது மோதியது. அதில், படுகாயமடைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார். வானுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மரத்தில் கார் மோதி முதியவர் பலி

விழுப்புரம் ; மரத்தில் கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.செஞ்சியை சேர்ந்தவர் ஜெயபால்,65; இவர், நேற்று முன்தினம் தனது டாடா டியாகோ காரில் திருவெண்ணெய்நல்லுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.விழுப்புரம் அடுத்த எல்லீஸ்சத்திரம் அருகே வந்தபோது, கார் நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தில் மோதியது.அதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil news
3,520 குக்கர்கள் அரியலூரில் பறிமுதல்

பெரம்பலுார்:அரியலுார் அடுத்துள்ள வாரணவாசியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், அவ்வழியே வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரிகளில் தஞ்சை மாவட்ட அ.ம.மு.க., ஜெயலலிதா, சசிகலா, தினகரன் படங்களுடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டிய 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3520 பிரஷர் குக்கர்கள் இருந்தன. லாரிகளையும் அரியலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்குகொண்டு சென்றனர். அரியலுார் சட்டசபை தேர்தல் அலுவலர் ஏழுமலை விசாரிக்கிறார்.

லீசுக்கு ஹோட்டல்: மோசடி செய்தவருக்கு வலை

கோவை:லீசுக்கு ஓட்டல் எடுத்து தருவதாக கூறி, ரூ.4.46 லட்சம் மோசடி செய்தவரை, போலீசார் தேடுகின்றனர்.கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, பாரத் அவென்யூவை சேர்ந்தவர், தினேஷ்,27. ஓட்டல் ஒன்றை, லீசுக்கு எடுத்து நடத்த முயற்சித்தார். அவருக்கு அறிமுகமான ஒரு வாலிபர், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில், அரசு கேன்டீன்களை லீசுக்கு எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதற்கு முன்பணமாக, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.கடந்த, 2018 முதல், 2020 வரையிலான காலகட்டத்தில், ரூ.4.46 லட்சத்தை, அவரிடம் தினேஷ் வழங்கியுள்ளார். பணத்தை பெற்ற அவர், கேன்டீன்களை லீசுக்கு எடுத்து தராமல், காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து கேட்டபோது, அந்த வாலிபர் முறையாக பதிலளிக்கவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ், சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். விசாரணையில், துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி, சர்ச் ரோட்டை சேர்ந்த செல்வகுமார் என்பவர், பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை, போலீசார் தேடுகின்றனர்.

பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 10 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதம்

கானத்துார்: கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரைச் சேர்ந்தவர் மகபுஜான், 60. அதே பகுதியில், ஒரு வீட்டில் காவலாளியாக பணி புரிந்தார்.2014ம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள, 13 வயது சிறுமியை தனியாக அழைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார்.கானத்துார் போலீசார், மகபுஜானை கைது செய்தனர். இவ்வழக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரி வாதாடினார்.நீதிபதி வேல்முருகன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மகபுஜானுக்கு, 10 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கைது

திருப்பூர்:சினிமா பாணியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மனைவியே கணவரை கொலை செய்து, சாக்கு மூட்டையில் சடலத்தை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம், தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி, 38; காய்கறி வியாபாரி. இவரது மனைவி தேவி, 35. கடந்த, 14ம் தேதி முதல் கணவரை காணவில்லை என, கீரனுார் போலீசில், தேவி புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.
தேவியிடம் ஒரு வாரமாக நடத்திய விசாரணையில், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகமானது. அவரை கண்காணித்து வந்த போலீசார், அவருக்கு தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருப்பதை உறுதி செய்தனர். தேவி மற்றும் தாராபுரத்தை சேர்ந்த, பனியன் தொழிலாளி அபிஷேக், 20, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.
இருவரின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, சினிமா பாணியில் கொலை செய்து, சடலத்தை தாராபுரத்தில் கிணற்றில் வீசியது தெரிந்தது. தாராபுரம் தீயணைப்பு வீரர்கள், சடலத்தை கைப்பற்றி, பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரையும், கீரனுார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், தண்டபாணியை, தேவி திருமணம் செய்தார். தாராபுரம் பகுதியில் தேவி, பழ வியாபாரம் செய்த போது, அபிஷேக் உடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கு, தண்டபாணி இடையூறாக இருப்பதாக நினைத்த தேவி, அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.கடந்த, 14ம் தேதி அபிஷேக்கை கீரனுாருக்கு வரவழைத்த தேவி, கணவரை அதிகமாக மது அருந்த வைத்தார்.
அதன்பின், இருவரும் சேர்ந்து, தண்டபாணி முகத்தில், பாலித்தீன் பையை மாட்டி, கை கால்களை கட்டி, மூச்சு திணற வைத்து, கொலை செய்தனர். சடலத்தை சாக்குப்பையில் கட்டி, 'டூ - வீலரில்' வைத்து, தாராபுரம் புதிய அமராவதி பாலம் அருகே உள்ள பயன்பாடற்ற கிணற்றில், வீசி சென்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


latest tamil news
குளத்தில் ஏ.டி.எம்., கார்டுகள் திருத்தணி அருகே பரபரப்பு

திருத்தணி:தனியார் கூரியர் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., கார்டுகள், வினியோகம் செய்யப்படாமல், குளத்தில் வீசப்பட்ட சம்பவம், திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக நிகழ்வுகள்317 மாணவிகள் கடத்தல்

லாகோஸ்: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கொள்ளை கும்பல்கள், மாணவியர் உட்பட பலரை கும்பலாகக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது, சிறையில் உள்ள தங்களுடைய கும்பலைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கக் கோருவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2014ல், போகோஹராம் என்ற பயங்கரவாத கும்பல், 276 பள்ளி மாணவியரைக் கடத்திச் சென்றது. அதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் இன்னும் மீட்கப்படவில்லை. கடந்தாண்டு டிச.,ல் 344 மாணவியர் கடத்தப்பட்டனர்; சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். கடந்த மாதத்தில், 27 மாணவியர் உட்பட, 42 பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.இந்நிலையில், ஜாம்போரா மாநிலத்தில், ஒரு உறைவிடப் பள்ளிக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்த கும்பல், 317 மாணவியரைக் கடத்திச் சென்றுள்ளது. ராணுவ முகாமுக்கு அருகில் இந்தப் பள்ளி உள்ளது. முன்னதாக பள்ளி வரும் வழியில் இருந்த சோதனைச் சாவடியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் தெரியவில்லை.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X