குஷ்பு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுவார் என, பேச்சு ஓடுகிறது.கட்சிக்கு புதிதாக வந்தவர் என்பதால், தேசிய தலைவர்கள் அனைவரிடமும் பழக்கமாக முயன்று வருகிறார். என்ன சிக்கல் என்றால், முன்பு வேறு கட்சிகளில் இருந்தபோது, சமூக ஊடகத்தில், பா.ஜ., தலைவர்களை அவர் விமர்சனம் செய்திருக்கிறார். அதில், பெரும்பாலும் கிண்டல் இருக்கும்.
![]()
|
எனவே, அப்படியான தலைவர்களை சந்தித்து, 'ஸாரி' சொல்லி சமாதானம் செய்ய விரும்புகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் சந்தித்த தலைவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சென்னை வந்த நிர்மலாவை போய் பார்த்தார்.
'மேம் உங்களை, 'டுவிட்டரில்' பல முறை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அதெல்லாம், அரசியல் ரீதியில் சொன்ன கருத்துதான். தனிப்பட்ட கசப்பு எதுவும் கிடையாது. உங்களையும் அப்படி விமர்சித்ததற்காக வருந்துகிறேன். ஸாரி...' என, குஷ்பு சொல்லியிருக்கிறார்.
நிதி அமைச்சரின் ரெஸ்பான்ஸ்: 'ஓ... அப்படியா. நான் உங்கள், 'டுவீட்' எதையும் இதுவரை பார்த்ததே இல்லை. பரவாயில்லை. அரசியல் என்றால் அப்படித்தானே. டேக் இட் ஈஸி!'
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE