அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்!

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.ராஜகுமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தேர்தலில், ஒரு வேட்பாளர், இரு தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்க கூடாது. தேர்தல் ஆணையமும், இதற்கு ஆதரவுதெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு தான், இது குறித்து முடிவெடுக்க வேண்டுமாம். ஒரு வேட்பாளர், இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றால்,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.ராஜகுமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தேர்தலில், ஒரு வேட்பாளர், இரு தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்க கூடாது. தேர்தல் ஆணையமும், இதற்கு ஆதரவுதெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு தான், இது குறித்து முடிவெடுக்க வேண்டுமாம். ஒரு வேட்பாளர், இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதில் ஒரு தொகுதியை, ராஜினாமா செய்ய வேண்டும்; அதனால், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு, மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது.



latest tamil news



அது மட்டுமின்றி, தேர்தல் பணியாற்றிய, அரசு அதிகாரிகளின் உழைப்பும், நேரமும், ஊதியமும் வீணாகிறது. எவ்வகையில் பார்த்தாலும், ஒரு வேட்பாளர், இரு தொகுதிகளில் போட்டியிடுவது ஏற்கத்தக்கது அல்ல. அரசியல்வாதிகள் செய்யும் அடாவடித்தனங்களில், இதுவும் ஒன்று. அதே போல, எம்.பி.,யாக இருப்பவர், எம்.எல்.ஏ.,வுக்காக போட்டியிட, மனு தாக்கல் செய்யலாம். இதுவும், மோசடித்தனமே! அவர், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார். திரும்பவும், அந்த லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இது, அரசியல்வாதிகளின், அப்பட்டமான சுயநலத்திற்கான வழிமுறை. குற்றப்பின்னணி உள்ளவரை, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கின்றனர். அதற்குப் பின், தேர்தலில் குற்றப்பின்னணிஉடையோர் இவ்வளவு பேர் என, பட்டியல் வெளியிடுகின்றனர். எதற்கு இந்த ஏமாற்று வேலை?


latest tamil news



மக்கள் எதுவும் கேட்காதவரை, அரசியல்வாதிகள், அவர்களது சவுகரியத்திற்கு ஏற்றவாறு,எல்லாவற்றையும் மாற்றிக் கொள்வர். தேர்தல் நடைமுறைகளில், சில சீர்த்திருத்தங்கள்மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே, தாங்க முடியாத கடன் சுமையில் இருக்கும் மக்கள், மேலும் அவதிப்படுவர். 'கொரோனா'வால், நம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மறுதேர்தல் போன்றவற்றை நடத்தி, மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டாமே!

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
28-பிப்-202121:44:33 IST Report Abuse
vnatarajan அரசியல்வாதிகளை குற்றம் சொல்லி பயனில்லை. ஏனென்றால் மக்கள்தான் இரண்டு தொகுதிகளிலும் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கின்றனர் . அதனாலே யாராவது இரண்டு தொகுதிகளில் நின்றால் இரண்டு தொகுதி மக்களும் நாங்கள் அந்த வேட்பாளருக்கு ஒட்டு போடமாட்டேர்ன் என்று கூறிவிடவேண்டும் அப்ப்டி கூறினால் எந்த வேட்பாளரும் இரண்டு தொகுதியில் நிற்கமாட்டார்கள் அப்படி செய்வார்களா மக்கள்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
28-பிப்-202121:13:08 IST Report Abuse
bal அப்பட்டமான உண்மை. ஒரு ஆள் இரு தொகுதிகளில் போட்டியிடக்கூடாது...இந்த ராகுல் வடக்கே பப்பு வேகாது என்று தெரிந்ததும் கேரளாவில் போட்டியிட்டார். அதே போல் இந்திரா ஆந்திராவில் போட்டியிட்டார் ஒரு முறை....பண விரயம்...
Rate this:
Cancel
28-பிப்-202120:01:18 IST Report Abuse
S. Balakrishnan. நல்ல ஆலோசனை. யார் செயல் படுத்துவது ? அரசியல்வாதிகள் ஒரு மனதுடன் இந்த கருத்துக்களை செயல்படுத்த பாராளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து சட்டமாக்க வேண்டும்.மக்கள் புலம்பல் அரசியல்வாதிகளுக்கு கேட்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X