பொது செய்தி

இந்தியா

அரிய வகை நோய் கொள்கை; மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021
Share
Advertisement
புதுடில்லி: 'உலகெங்கும் உறுதி செய்யப்பட்ட, 8,000க்கும் மேற்பட்ட அரிய வகை நோய்களில், 450 மட்டுமே இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அரிய வகை நோய் தொடர்பான கொள்கையை உருவாக்க வேண்டும்' என, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.மரபணு கோளாறுஅரிய வகை நோய்களுக்கான இந்திய அமைப்பு என்ற அரசு சாரா அமைப்பின் செயல் இயக்குனர், பிரசன்னா ஷிரோல் கூறியுள்ளதாவது:உலகெங்கும், 8,000க்கும்

புதுடில்லி: 'உலகெங்கும் உறுதி செய்யப்பட்ட, 8,000க்கும் மேற்பட்ட அரிய வகை நோய்களில், 450 மட்டுமே இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அரிய வகை நோய் தொடர்பான கொள்கையை உருவாக்க வேண்டும்' என, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.



latest tamil news


மரபணு கோளாறுஅரிய வகை நோய்களுக்கான இந்திய அமைப்பு என்ற அரசு சாரா அமைப்பின் செயல் இயக்குனர், பிரசன்னா ஷிரோல் கூறியுள்ளதாவது:உலகெங்கும், 8,000க்கும் மேற்பட்ட அரிய வகை நோய்கள் உள்ளன. இதில், 80 சதவீதம் பிறப்பின்போது ஏற்படும் மரபணு கோளாறால் ஏற்படுபவை. குறிப்பாக, குழந்தைகள் பிறக்கும்போதே, இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன.

நம் நாட்டில், ஒரு குழந்தை, இவ்வாறு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிவதற்கு, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைக்கு இவ்வாறு நோய் இருப்பதை அறிவதற்கான பரிசோதனை வசதியும் போதிய அளவில் இல்லை. சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் மிக மிக குறைவாகவே உள்ளது.நம் நாட்டில் இதுவரை, 450 வகையான அரிய வகை நோய்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உரிய சிகிச்சைசர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து அரிய நோய்களையும் அங்கீகரிக்க வேண்டும்.


latest tamil news


இதன் மூலம் உரிய சிகிச்சை அளிக்க முடியும்.அனைத்து குழந்தைகளுக்கும் பிறக்கும்போதே பரிசோதனை செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும். இது தொடர்பாக, ஒரு தேசிய அளவிலான கொள்கையை உருவாக்கிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X