உரிமையாளரின் உயிரை பறித்த சண்டை சேவல்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவில், சேவல் சண்டைக்கு தயார் படுத்தப்பட்ட சேவல் தாக்கியதில், அதன் உரிமை யாளர் உயிரிழந்தார்.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.சில தினங்களுக்கு முன், அந்த சேவல் சண்டை நடந்தது.

ஐதராபாத்: தெலுங்கானாவில், சேவல் சண்டைக்கு தயார் படுத்தப்பட்ட சேவல் தாக்கியதில், அதன் உரிமை யாளர் உயிரிழந்தார்.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது.



latest tamil news


இங்குள்ள லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.சில தினங்களுக்கு முன், அந்த சேவல் சண்டை நடந்தது. அதில் பங்கேற்ற சேவல் ஒன்றின் காலில், கூர்மையான கத்திகள் கட்டப்பட்டிருந்தன. போட்டிக்கு தயார்படுத்தப்பட்டபோது, அந்த சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது.


latest tamil news


அதை, உரிமையாளர் பிடிக்கவே, அந்த சேவல் தன் கால்களால், அவரை தாக்கியது. அப்போது, காலில் கட்டப்பட்டிருந்த கத்தி, அவரின் இடுப்பை பதம் பார்த்தது.படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் உயிரிழந்தார்.உயிரிழந்த நபர், அந்த சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பது தெரியவந்து உள்ளது. சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள, 15 பேரை தேடும் பணிகளில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
28-பிப்-202122:35:39 IST Report Abuse
vnatarajan இந்த கொடூரமான சேவல் சண்டைக்கு ஆந்திர அரசு கடுமையான சட்டம் இயற்றி முற்றுப்புள்ளிவைக்கவேண்டும்
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
28-பிப்-202112:18:53 IST Report Abuse
Rajalakshmi சட்ட விரோதமானது என்று தெரிந்தும் எப்படி இந்த மாதிரி கொடூர செயல்களை ''விளையாட்டு'' என்ற பெயரில் அனுமதிக்கலாம் ? கொரோனா மாதா அதிபயங்கரமாக பரவி இப்படிப்பட்ட திருந்தாத ஜென்மங்களை ஒழித்துக்கட்ட வேண்டும். பூமிபாரம் தொலைய வேண்டும்.
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
28-பிப்-202112:09:07 IST Report Abuse
Rajalakshmi அப்பாடா மனதிற்கு இதமாக இருக்கின்றது. சேவல் வாழ்க இதே மாதிரி அணைத்து சேவல்களும் , மயில்களும் , பசுக்களும் , எருமை மாடுகளும் , ஆடுகளும் , யானைகளும் , பன்றிகளும் வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் மக்களனைவரையும் கிழித்து கொன்றுபோட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X