பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை போலீசுக்கு தேர்தல் கமிஷன் நிபந்தனை

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பறக்கும் படையில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இது குறித்து, தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: எஸ்.ஐ., தன் காவல் குழுவினருடன், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பொறுப்பு வருவாய் துறை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பறக்கும் படையில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.



latest tamil news


இது குறித்து, தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: எஸ்.ஐ., தன் காவல் குழுவினருடன், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பொறுப்பு வருவாய் துறை அலுவலரிடம், உரிய நேரத்தில் பணிக்கான அறிக்கை தாக்கல் செய்தல் வேண்டும்.

பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவிற்கு தகவல் கிடைத்ததும், வருவாய் துறை அலுவலருடன், சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும்l போலீசார் முழு சீருடையுடன் பணியில் இருத்தல் வேண்டும். பணியில், கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவின் பொறுப்பு அலுவலராக இருக்கும் செயல்துறை நடுவர் அந்தஸ்தில் இருப்பவர் மட்டுமே, சோதனை, வாகன தணிக்கை செய்ய வேண்டும். அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு மட்டுமே அளித்திட வேண்டும்

சோதனையின்போது, வாகனத்தில் பெண்கள் இருந்தால், அவர்களை, பெண் காவலர், மறைவான இடத்தில் சோதனை செய்ய வேண்டும். வாகன தணிக்கையின் போது, சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக இருந்தால், அருகில் உள்ள இன்ஸ்பெக்டருக்கு தெரியபடுத்த வேண்டும்


latest tamil news


சோதனையில் கைப்பற்றப்படும் சொத்தின் விபரத்தை, சம்பந்தப்பட்டோரிடம் வருவாய் துறை அதிகாரி கையொப்பம் பெறுவர். அப்போது, 10 லட்சத்துக்கும் மேல் கைப்பற்றும் போது, வருமான வரித்துறைக்கு, வருவாய் துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும்l பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் பற்றிய விபரங்களை தாமதமின்றி, எல்லைக்கு உட்பட்ட காவல் இணை கமிஷனர், துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கும், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, 044 - 2345 2437 என்ற எண்ணிற்கும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


செய்ய கூடாதவை?

போலீசார் தன்னிச்சையாக சோதனை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபடக்கூடாது; யாரையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசக்கூடாதுl சுழற்சி முறையில் பணியில் ஈடுபடும் போது, எவ்வித அனுமதியும் இன்றி, சுழற்சி முறையை மாற்றக் கூடாது. காவல்துறைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாதுl சந்தேகத்தில் பெண்களை சோதனை செய்யும் போது, பெண் காவலர் இன்றி சோதனை செய்யக்கூடாது. பணியின் போது, அலைபேசி பயன்படுத்த கூடாது; உயரதிகாரிகள் கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
28-பிப்-202121:48:07 IST Report Abuse
bal இதெல்லாம் புருடா...எப்படி ஒவ்வொரு தேர்தலிலும் குவாட்டர், பிரியாணி துட்டு மூலம் வெல்கிறார்கள்...சின்ன சின்ன வண்டிகளாய் பிடித்துவிட்டு பெரிய வற்றை கோட்டை விடுவார்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-பிப்-202119:20:38 IST Report Abuse
தமிழவேல் தேர்தல் சமயத்தில் பணம் தரும்போது, கையும் களவுமாக பிடிபட்டவர்கள் யாராவது, இதுவரையில் தண்டனை பெற்று இருக்கின்றார்களா ?
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-பிப்-202116:05:17 IST Report Abuse
S.Baliah Seer உழுத்தோப்போன பழைய பல்லவி தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X