அரசியல் செய்தி

தமிழ்நாடு

"மக்களை பாதிக்காத வகையில் போராட நம் ஆட்களுக்கு இன்னும் தெரியவில்லையே...."

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களை அழைத்து, அரசு பேச்சு நடத்தி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.-சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார்'மக்களை பாதிக்காத வகையில் போராட, நம் ஆட்களுக்கு இன்னும் தெரியவில்லையே;
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் , ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் ,தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்,முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களை அழைத்து, அரசு பேச்சு நடத்தி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.-சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார்


'மக்களை பாதிக்காத வகையில் போராட, நம் ஆட்களுக்கு இன்னும் தெரியவில்லையே; ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பின்பற்றியதையே, இப்போதும் பின்பற்றுகின்றனரே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் அறிக்கைபெண், ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் அத்துமீறி நடந்து கொண்ட கூடுதல், டி.ஜி.பி., ராஜேஷ் தாசை, காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். குற்றவாளிகள் பதுங்கும் குழி அது. அதற்கு மாறாக, அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.-இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன்


latest tamil news'பெண்களை மதிக்கத் தெரியாத ஜென்மங்களுக்கு, நல்ல தண்டனை கொடுக்கத் தான் வேண்டும்...' என, கூறத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் அறிக்கைபள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளதன் மூலம், ஆசிரியர்களின் உழைப்பு வீணாகியுள்ளது. கொரோனா காலத்திற்கு பின், ஆசிரியர்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். ஆசிரியர்கள் மீது அரசுக்கு அக்கறையில்லை என்பதை இது காட்டுகிறது.-ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன்


'ஆசிரியர்கள் உழைப்பு வீணாகவில்லை; மறந்திருந்த பாடங்களை அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டுள்ளனர். அதே உத்வேகத்துடன் மீண்டும் மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் சரி தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் பேட்டி


தி.மு.க.,வில் அப்பா, மகன், பேரன் என, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமை பதவிக்கு வருவர். ஆனால், அ.தி.மு.க.,வில் அப்படியில்லை. உழைப்பவர்களுக்கு உயர் பதவி நிச்சயம். அக்கட்சிக்கு, தமிழக மக்களை பற்றி தெரியாது; தங்கள் குடும்பத்தை மட்டும் தான் தெரியும்.-தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி


'தி.மு.க., கவலைப்பட்டதாக தெரியவில்லையே; 'போஸ்டர்'களில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி படங்கள் மட்டும் தான் உள்ளன...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேச்சுபெண் ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் அத்துமீறி நடந்துள்ள, கூடுதல், டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ், தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார். காவல் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


'உங்கள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கைபெண், ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கூடுதல், டி.ஜி.பி., தொடர்ந்து இதுபோன்ற பல குற்றங்களை செய்து வந்தவர் என்பது செய்தித்தாள்களின் மூலம் தெளிவாகிறது. அவரை உடனடியாக, தற்காலிக பணிநீக்கம் செய்து, முறையாக விசாரணை நடத்த வேண்டும்.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'ஒரு திருட்டு வழக்கில் சிக்கினால், பல திருட்டு வழக்குகளை அந்த நபர் மீது போலீசார் போடுவரே; அதுபோல அல்லவா இருக்கிறது, உங்களின் புகார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கைஇந்தியாவில், எந்த மாநிலத்திலும் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை; ஆனால், தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில், இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது; ஆனால், தமிழகம் பாதுகாப்பாக உள்ளது.-புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்


'உண்மை தான். சமீப நாட்களாக நிலைமை மாறி வருகிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டிஅடுத்த மாதம், 1ம் தேதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாள் வருகிறது. அந்த நாளை, ஆந்திராவில் சிறப்பாக கொண்டாட பல ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதில், கட்சியினர் அனைவரும் இணைய வேண்டும்.-ஆந்திர மாநில தி.மு.க., அமைப்பாளர் மூர்த்தி


'ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்த, டிச., 21ம் தேதியை கொண்டாடினாலாவது, அந்த மாநிலத்தில் சலுகைகள் கிடைக்கும். அதை விட்டு...' என, அறிவுறுத்தத் தோன்றும் வகையில், ஆந்திர மாநில தி.மு.க., அமைப்பாளர் மூர்த்தி அறிக்கை


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இதன் மூலம் அந்த மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். யூனியன் பிரதேசமாக இருந்த கோவா, மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது போல, புதுச்சேரியையும் மாற்ற வேண்டும்.-பா.ம.க., முன்னாள் எம்.பி., ராமதாஸ்


'பல ஆண்டுகள், காங்., ஆட்சி அங்கு நடந்துள்ளது. அப்போதெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டீர்களே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், பா.ம.க., முன்னாள் எம்.பி., ராமதாஸ் அறிக்கைமேய்ச்சேரி தி.மு.க., கூட்டத்தில், அருந்ததியினத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜ் அவமதிக்கப்பட்டார். அதை கேட்க ஆளில்லையா என, அருந்ததியினர் வருத்தப்பட்டனர். ஜாதியை சொல்லி, பகுத்தறிவை சொல்லி, சமூக நீதியை சொல்லி, தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றும் முயற்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஈடுபட வேண்டாம்.-முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி


'ஜாதி வேற்றுமைக்கு எதிரான கட்சி என கூறிக் கொள்ளும், தி.மு.க.,வின் லட்சணம் வெளிப்பட்டு விட்டது. அது தவறு என்ற ரீதியில் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள வாய் திறக்க மறுக்கின்றனரே...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தி.மு.க.,விலிருந்து, பா.ஜ.,வில் இணைந்துள்ள முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி பேச்சு

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
28-பிப்-202122:28:32 IST Report Abuse
vnatarajan திமுகாவில் அப்பா மகன் பேரன்கள்தான் கட்சி தலைமைக்கு வருவாங்கனு சொல்லறீங்க. ஸ்தாலினுக்கு கோபம் வந்து இது எங்கள் குடும்ப மாட்டர் அதனாலே யாரும் எதுவும் சொல்லக்கூடாதுனு சொல்லப்போறார்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
28-பிப்-202121:31:20 IST Report Abuse
bal இதுதான் இந்தியா கலாச்சாரம்...சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருப்போம்...கோடிஸ்வரன் விவசாயி என்ற பெயரில் ஆர்பாட்டம் செய்வான்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-பிப்-202119:05:53 IST Report Abuse
Endrum Indian அப்போ இந்த மாதிரி போராட்டத்தை யாரும் கண்டு கொள்ள மாட்டார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X