பொது செய்தி

இந்தியா

19 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி51 ராக்கெட் இன்று (பிப்.,28) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். மொத்தம் 19
PSLV, Rocket, SuccessfullyLaunched, பிஎஸ்எல்வி, ராக்கெட், செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி51 ராக்கெட் இன்று (பிப்.,28) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். மொத்தம் 19 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது. இதில், பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் 'அமேசோனியா - 1' என்ற செயற்கைக்கோளும் அடங்கும்.


latest tamil news


அத்துடன், இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோவை சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் ஐயோ ஐயஹோ! ராக்கெட்டிலும் சங்கி கலர். பாலில்லாமல் சோறில்லாமல் எத்தனையோ குழந்தைகள் சாகின்றன!!? ராக்கெடிற்க்கு பல ஆயிரம் கோடி செலவு செய்தால் நியாயமா?? . எங்கள் தள்ளபதி முதல்வரானால் ராக்கெட்டை நிறுத்தி அந்தப் பணத்தில் மரத் தமிழன் வாழ்வை சிறக்க செய்வார்.
Rate this:
Cancel
raman - Madurai,இந்தியா
28-பிப்-202113:01:32 IST Report Abuse
raman மாம் மிகவும் பேரமைப்படவேண்டிய சாதனை
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
28-பிப்-202111:33:15 IST Report Abuse
SUBBU PSLV-C51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டுவிட்டது.இதனுடன் இந்தியாவின் 5 செ.கோள்கள்,அமெரிக்காவின் நானோ 13 செ.கோள்கள், பிரேஸிலின் 634 கிலோ எடை கொண்ட அமேசானியா உட்டபட மொத்தம் 19 செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது ISRO.இதன் மொத்த எடை கிட்டத்தட்ட ஐந்து டன்னுக்கு மேல் இருக்கும்.இந்தியாவின் இந்த சாதனையை பார்த்து இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமையடைவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X