தமிழ் கற்க ஆசை: பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தமிழ் கற்க ஆசை: பிரதமர் மோடி

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (24)
Share
புதுடில்லி: தமிழை கற்க வேண்டும் என எவ்வளவு முயற்சி செய்தாலும், என்னால் அதில் வெற்றி பெற முடியவில்லை எனவும், உலகிலேயே மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கோடைகாலத்திற்காக மழைநீரை சேமிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வார்வதன் மூலம் மழைநீரை
tamil, Maankibaat,narendramodi, Pmnarendramodi, pmmodi, modi, தமிழ், பிரதமர் மோடி, மன் கி பாத், பிரதமர் நரேந்திர மோடி, மோடி, பிரதமர் மோடி, நரேந்திர மோடி

புதுடில்லி: தமிழை கற்க வேண்டும் என எவ்வளவு முயற்சி செய்தாலும், என்னால் அதில் வெற்றி பெற முடியவில்லை எனவும், உலகிலேயே மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கோடைகாலத்திற்காக மழைநீரை சேமிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வார்வதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். இயற்கை அளிக்கும் தண்ணீரை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நீரானது நமக்கு இயற்கை அளித்த கூட்டு பரிசு. அதனை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நீரை பாதுகாக்கும் கூட்டு முயற்சி திருவண்ணாமலையில் நடக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மூடப்பட்ட கிணறுகளை புதுப்பித்து வருகின்றனர்.

நமது அறிவும் தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால், எதையும் கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. தற்போதைய இளைஞர்களிடம் புதிய மாற்றத்தை உணர முடிகிறது. இன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. ' ராமன் விளைவை' கண்டுபிடித்த நமது விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய விஞ்ஞானிகள் குறித்து நமது இளைஞர்கள் படிப்பதுடன், இந்திய அறிவியல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தன்னிறைவு இந்தியா திட்டத்தில் அறிவியலின் பங்களிப்பு மிகப்பெரியது.

தன்னிறைவு இந்தியாவிற்காக இந்தியாவில், ஏராளமானோர் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். டில்லியில் உள்ள எல்இடி பல்ப் தொழிற்சாலையில் பணிபுரிந்த பிரமோத் என்பவர், பல்ப் உற்பத்தியை புரிந்து கொணடு, தனது சொந்த ஊரில், சிறிய அளவில் எல்இடி பல்ப் தொழிற்சாலையை துவக்கி உள்ளார். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, காசிரங்கா தேசிய பூங்காவில் 112 பறவை இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதற்கு நீர் சேகரிப்பும், குறைந்தளவு மனிதர்கள் நடமாட்டமும் காரணமாகும்.


latest tamil news
உலகின் தொன்மையான மொழியான தமிழை கற்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகளின் ஆழம் குறித்து என்னிடம் பலர் கூறியுள்ளனர். இந்த உலகத்தில் மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் கற்க வேண்டும் என நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. குஜராத் முதல்வரானதில் இருந்து பிரதமர் ஆன பின்பும் தமிழ் கற்று வருகிறேன். ஆனால், சரியாக கற்க முடியவில்லை. தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அந்த மொழியில் உள்ள இலக்கியம் மிகவும் தொன்மை வாய்ந்தவை.

மாணவர்கள் தேர்வு குறித்து கவலைப்படாமல் சிரித்த முகத்துடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும். விவசாய நிலத்தில் உள்ள பிரச்னைகளை விவசாயிகளே சரி செய்து வருகின்றனர். சுயசார்பு இந்தியாவை உருவாக்க பல விதமான அரசியல், விஞ்ஞான விஷயங்கள் உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X