மெர்க்குரி பூக்கள்... மாடல் நிலாக்கள்...

Added : பிப் 28, 2021
Share
Advertisement
'மெர்க்குரி பூக்கள்... மாடல் நிலாக்கள்... வரும் போது ஜொலிக்கும் பூமி'... என டிப்பி மிஸ்டர் அண்ட் மிஸ் சென்னை ஸ்டார் மாடல் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மயக்கும் மாயா மாயா, வசீகரிக்கும் வர்ஷா, ரம்யமான ராகவி மனம் திறக்கிறார்கள்.வசீகரிக்கும் வர்ஷாநான் சென்னை பொண்ணு தான்... எம்.எஸ்.சி.ஐ.டி., படிக்கிறேன். மாடலிங் வாய்ப்பு வந்ததால் உள்ளே வந்தாச்சு. 7 ஆண்டுகளாக
மெர்க்குரி பூக்கள்... மாடல் நிலாக்கள்...

'மெர்க்குரி பூக்கள்... மாடல் நிலாக்கள்... வரும் போது ஜொலிக்கும் பூமி'... என டிப்பி மிஸ்டர் அண்ட் மிஸ் சென்னை ஸ்டார் மாடல் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மயக்கும் மாயா மாயா, வசீகரிக்கும் வர்ஷா, ரம்யமான ராகவி மனம் திறக்கிறார்கள்.


வசீகரிக்கும் வர்ஷா


நான் சென்னை பொண்ணு தான்... எம்.எஸ்.சி.ஐ.டி., படிக்கிறேன். மாடலிங் வாய்ப்பு வந்ததால் உள்ளே வந்தாச்சு. 7 ஆண்டுகளாக கர்நாடக சங்கீதம் படிச்சிட்டு மேடைகளில் பாடுகிறேன். டான்ஸ் தெரியும் என்பதால் அதையும் விட்டு வைக்கலை. மிஸ் பாப்புலர் சவுத் இந்தியா விருதும் வாங்கி இருக்கேன். டிப்பி போட்டியில் 1வது ரன்னர் அப் வந்தேன். 3 குறும்படங்கள் நடிச்சிருக்கேன். சினிமா வாய்ப்புக்கு காத்திருக்கிறேன். நல்ல கதை வந்தால் ரெடி, டேக், ஆக்டிங் தான்...

இன்ஸ்டாகிராம் - _.varshaa_deepthi._


ரம்யமான ராகவி


நமக்கு எல்லாமே சென்னை தான், பிளஸ் டூ படிக்கிறேன். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரிடம் டான்ஸ் கற்றேன். மாடலிங் வாய்ப்பு வந்ததால் வெர்ஸ்டன் ஸ்டைல், புரபஷனல் மாடல் போட்டோ ஷூட் பண்றேன். இந்த ஸ்டார் மாடல் போட்டியில் ரன்னர் அப் வந்தேன். சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருக்கு. அதுலயும் முன்னேற முயற்சி செய்கிறேன்.
இன்ஸ்டாகிராம் - ragavi_yora


மயக்கும் மாயா



நான் மதுரை பொண்ணு. விஸ்காம் படிச்சிட்டு மாடலிங் வந்தேன். அதுக்கு முன்டான்ஸ் தெரியும். இயக்கம், ஒளிப்பதிவு ஆர்வம் இருப்பதால் டஸ்கி ஸ்கின் மாடல்ஸ் பிரச்னை குறித்து ஆவணப் படம் இயக்குறேன். பேஷன் ஷோ, கொலாப் ஷூட். பண்றேன். மறைந்த வி.ஜெ., சித்ரா நடித்த 'கால்ஸ்', 'தேவராட்டம்'ல் நடித்தேன். டிப்பி மிஸ்டர் அண்ட் மிஸ் சவுத், சென்னை, மிஸ் ஸ்பார்க் டைட்டில் வின் பண்ணினேன். மதுரை பொண்ணும் மாடலிங், சினிமாவில் சாதிக்க முடியும்னு நிரூபிச்சு பெரிய இடம் பிடிப்பது என் லட்சியம்.
இன்ஸ்டாகிராம் - maya_vibe


டிப்பி மிஸ்டர்


அண்ட் மிஸ் சென்னை ஸ்டார் மாடல் 2020 நடத்திய குறும்பட நடிகர், மாடல் சூரியன் கூறியதாவது:என் சூர்ய செல்வம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டி, கிராமப்புற மாணவர்களுக்குஇலவச கல்வி வழங்கஷோ நடத்தினேன்.மிஸ்சர்ஸ் இந்தியா இன்டர்நேஷனல் 2019 வின்னர் தேவந்தி நடுவர். 'டிவி' கேஸ்ட்டிங் இயக்குனர்கள் அருண், அரவிந்த் ஒருங்கிணைத்தனர், என்றார்.

இன்ஸ்டாகிராம் - dffiy.sic

- ஸ்ரீனி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X