புதுடில்லி: தமிழகம், கேரளா உள்பட 6 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களை விட, தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 11,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் தான் அதிகளவு பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது இந்த 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37 சதவீதம் பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா பரவக்கூடிய பகுதிகளை கண்காணிக்காவும், கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பயனுள்ள பரிசோதனைகளை மேற்கொள்ளவும், விரிவான கண்காணிப்பு செய்யவும், வைரஸ் தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தவும், நெருங்கிய தொடர்புகளையும் விரைவாக தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE