இந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் காங்கிரஸ் காணாமல் போகும் என, காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.காரைக்காலில் நடந்த பா.ஜ., பொதுக்குழுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: வரும் தேர்தலில் வெற்றி பெற்று, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.காங்கிரசில்
amitshah, Hmamitshah, bjp, congress, cong, narayanasamy, நாராயணசாமி, அமித்ஷா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ், பாஜ, காங், ஊழல், குடும்ப ஆட்சி

புதுச்சேரி: புதுச்சேரி மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் காங்கிரஸ் காணாமல் போகும் என, காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் நடந்த பா.ஜ., பொதுக்குழுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

வரும் தேர்தலில் வெற்றி பெற்று, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.காங்கிரசில் தகுதிக்கு இடமில்லை என்பதால், புதுச்சேரி மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். புதுச்சேரியில் 75 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், 40 சதவீதமாக குறைப்போம். மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏன் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பதை அறியாத தலைவர் உங்களுக்கு தேவையா என மக்களிடம் கேட்க விரும்புகிறேன்.


latest tamil newsபுதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேறாமல் போனதற்கு நாராயணசாமி தான் காரணம். பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட்டால், புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெறும். காங்., ஆட்சி தானாக கவிழ்ந்தது. அக்கட்சியில் தலைவர்கள் பாஜ.,வில் இணைந்தனர். காங்கிரசில் குடும்ப ஆட்சியே நடக்கிறது. இந்தியாவிலேயே காணாமல் போகும்.

நல்ல பொய் சொல்பவர் விருது நாராயணசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். தகுதிக்கும் திறமைக்கும் நாராயணசாமி வாய்ப்பு கொடுத்தது இல்லை. காங்., தலைவர்களின் காலை பிடித்து ஆட்சியை பிடிததார். புதுச்சேரியில் ஊழலை மட்டுமே வளர்க்கும் பணியை நாராயணசாமி பார்த்துள்ளார். புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு திட்டங்களை கொடுத்தது ஆனால், இந்த திட்டங்கள் மக்களுக்கு முறையாக பயன்படுத்தவில்லை. இதற்கு நாராயணசாமி தான் காரணம்.

பா.ஜ., வெற்றி பெறும் என்பதால் உள்ளாட்சி தேர்தல் புதுச்சேரியில் நடத்தவில்லை. நாராயணசாமி, அவரின் தலைவரிடமே பொய் கூறயவர்.மத்திய அரசின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. மக்கள் குறித்த அக்கறை அவருக்குஇல்லை. காங்கிரசை வளர்ப்பதில் மட்டும் அக்கறை கொண்டிருந்தார். ஊழலை மட்டும் நாராயணசாமி வளர்த்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு தானாக கவிழ்ந்தது. உலகின் மிக உன்னதமான மூத்த மொழியான தமிழில்பேச முடியவில்லை என வருத்தப்படுகிறேன். பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேச ஆசைப்படுகிறார். நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசவேன்இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த காங்கிரசை சேர்ந்த ஜான்குமார், தி.மு.க.,வை வெங்கடேசன் மற்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து சகோதரர் ராமலிங்கம் ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
28-பிப்-202120:43:39 IST Report Abuse
Davamani Arumuga Gounder ... இப்பொழுதுள்ள நிலையே தொடர்ந்தால்.. காங்கிரஸ் காணாமல் போகும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில், வலுவான எதிர்க்கட்சி இல்லைமலா இருந்தால்.. ஆளும் கட்சி யை சேர்ந்த தலைவர் அதாவது பிரதம அமைச்சர் சர்வாதிகாரியாக மாற வழியுண்டு.. தேசத்திற்கு இன்று உள்ள தலைமை மற்றும் அவரது முக்கிய அமைச்சர்கள் போன்றே எப்பொழுதும் இருக்க வழியில்லை.. எனவை காங்கிரஸ் தலைமை தனது ஏகாதிபத்திய மிடியாட்சி மனப்பான்மையை மாற்றிக் கொண்டு, அரசியல் அனுபவம் மிக்க.. முழு இரத்தமும் இந்திய இரத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையில் ஜனநாயக முறையில் உட்கட்சித் தேர்தல் நடத்தி தலைமையை, அதில் தேர்வானவர்களின் கையில் கட்சியின் தலைமையை ஒப்படைத்து விட்டு, அந்நிய நாட்டின் ஆதிக்க வாதிகளான ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட இன்றைய தலைவர்கள் விலகி வழிவிட வேண்டும். அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சிக்கு புது இரத்தம் பாயும். ஆட்டில் வலுவான எதிர்க்கட்சியாக மட்டுமின்றி, ஆளும்கட்சியாகவும் மாற வழி பிறக்கும்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
28-பிப்-202120:05:14 IST Report Abuse
Rajas ////கடந்த 2 ஆண்டுகளாக மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பதை அறியாத தலைவர் உங்களுக்கு தேவையா என மக்களிடம் கேட்க விரும்புகிறேன்//// தனி துறை என்றால் மீன்வளத்துறையின் அமைச்சர் (Cabinet Minister ) பெயர் என்ன. கால்நடை துறையின் அமைச்சர் (Cabinet Minister ) பெயர் என்ன. மீன் உற்பத்தியில் உலகில் இந்தியா மூன்றாவது இடம், வளர்ப்பு மீன் உற்பத்தியில் உலகில் இந்தியா இரண்டாவது இடம். இதற்கு ஏன் தனி அமைச்சகம் இல்லை.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
28-பிப்-202119:57:46 IST Report Abuse
Rajas ////கடந்த 2 ஆண்டுகளாக மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பதை அறியாத தலைவர் உங்களுக்கு தேவையா என மக்களிடம் கேட்க விரும்புகிறேன்//// மீன் வளத்துறைக்கு எங்கே தனி அமைச்சகம் இருக்கிறது. கால்நடை துறையோடு தானே சேர்ந்திருக்கிறது. அந்த துறையின் வெப்சைட்டில் இப்படி தான் உள்ளது. The Department of Fisheries is one of the two Departments under the Ministry of Fisheries, Animal Husbandry & Dairying.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X