பொது செய்தி

தமிழ்நாடு

இந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை : ''கோயில்களை பக்தர்களிடம் விடுங்கள், தமிழக கோயில்களை விடுவிக்கும் நேரமிது'' என சத்குரு பேசியது சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. இதனால் இந்து கோயில்களை விடுவியுங்கள் என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.'ஈஷா' அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, கடந்த இரு தினங்களாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டு
FreeHinduTemples, FreeTNTemples,

சென்னை : ''கோயில்களை பக்தர்களிடம் விடுங்கள், தமிழக கோயில்களை விடுவிக்கும் நேரமிது'' என சத்குரு பேசியது சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. இதனால் இந்து கோயில்களை விடுவியுங்கள் என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

'ஈஷா' அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, கடந்த இரு தினங்களாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதை முதல்வர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்துக்கு, 'டேக்' செய்துள்ளார்.

டுவிட்டரில் அவரின் பதிவு : ''11,999 கோயில்கள் ஒரு கால பூஜை கூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோயில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோயில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. தமிழ்நாட்டில் கோயில்கள் தான் தமிழ் சமூகத்தின் ஆன்மா. நகரங்கள், கோயில்களை பிரதான அம்சமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டன. இன்று அரசு பிடியில் ஆன்மாக்கள் உள்ளன - படிப்படியாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன'' என பதிவிட்டுள்ளார்.


latest tamil newsமேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், ''300 ஆண்டுகளுக்கு முன், கிழக்கிந்திய கம்பெனி கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது. கோயில் சொத்துக்களை களவாடுவதற்காகவே கைப்பற்றப்பட்டது. சுதந்திரம் பெற்று, 74 ஆண்டுகளுக்கு பின்பும், அதே நிலையில் உள்ளது. 'ஸ்லோ பாய்சன்' போன்று, மெல்ல மெல்ல கோயில்களை அழித்து சாகடிக்கின்றனர். கோயில்கள் பக்தர்கள் கையில் இருந்தால், தங்கள் உயிரே போனாலும், அதை பத்திரமாக பார்த்து கொள்வார்கள்.

உலகில் இருக்கும் எல்லா மதங்களும் நம் நாட்டில் கலந்துள்ளது. மற்றவர்களுக்கு சுதந்திரம் இருக்கும்போது, நம் கோயில்களுக்கு மட்டும் அடிமைத்தனம் உள்ளது. இதை நாம் மாற்றியாக வேண்டும். நம் நாட்டை, 'மதச்சார்பற்ற நாடு' என்கிறோம். அதன் அர்த்தம், 'மதத்தில் அரசு தலையிட கூடாது' என்பது தான். இந்த தலைமுறையில், நாம் கோவில்களை பாதுகாக்காவிட்டால், அடுத்த, 50 - 100 ஆண்டுகளில் கோயில்களே இல்லாமல் போய்விடும். நம் கலாசாரத்துக்கு மூலமாகவும், உயிர்நாடியாகவும் இருக்கும் கோயில்கள் முற்றிலும் அழிந்துவிடும். தமிழக கோயில்கள், அரசின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும்.

இவ்வாறு, சத்குரு கூறியுள்ளார்.

சத்குருவின் இந்த பதிவு மற்றும் வீடியோவிற்கு சமூகவலைதளமான டுவிட்டரில் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் சந்தானமும், சந்குருவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரைப்போன்று பலரும் அவரது கருத்தை வரவேற்றுள்ளனர். இதனால் டுவிட்டரில் #FreeHinduTemples என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.


latest tamil news
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள்...''ஏன் இந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மதத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு இதுபோன்று இல்லையே. இந்து கோயில்கள் என்ன அரசுக்கான பண வங்கியா?''

''எங்கள் உரிமை எங்களுக்கு வேண்டும். எல்லாவற்றிலும் சமத்துவம் வேண்டும்''.

''இந்து கோயில்கள் வணிக ரீதியாக மாறிவிட்டது. நுழைவுக்கு கட்டணம், பார்க்கிங் கட்டணம், தரிசனத்திற்கு கட்டணம், பிரசாதம், அர்ச்சனை இப்படி இன்னும் பல....''

''பிரதமர் மோடி அவர்களே... தயவு செய்து இந்து கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும். சில அரசாங்கங்கள் தங்கள் சொந்த நலன்களை நிறைவேற்ற இந்த கோயில் நிதியைப் பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வரை தினமும் இதுப்பற்றி டுவீட் செய்வேன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது''.


latest tamil news''இந்து சமூகம் மட்டுமே இந்த போன்ற சிக்கல்களை சந்திக்கின்றன. இது பாரபட்சமானது. இது மதச்சார்பின்மை என்ற கருத்தை மீறுகிறது. மேலும், மத அமைப்புகளை அரசு நடத்த இந்திய அரசியலமைப்பு அனுமதிக்காது. இந்து மத கோயில்களை மட்டுமே அரசாங்கங்கள் ஏன் கட்டுப்படுத்துகின்றன''.

''ஒரு மதச்சார்பற்ற அரசு என்றால், மதங்களின் விவகாரங்களில் தலையிட கூடாது. இந்து கோயில்கள் நிரந்தரமாக பால் கறக்கும்(பணம்) பசுக்கள் அல்ல. அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்கவும்''.

''இந்தியாவில் மட்டும் ஏன் கோயில்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது புரியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இப்படித்தான் இருக்கிறது. எல்லா மத நிறுவனங்களையும் கட்டுப்படுத்தவும். இந்துக்களை மட்டும் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? கோயில் என்பது அரசாங்கத்தின் பண இருப்பு என்று அர்த்தமல்ல''.

இதுபோன்று பலரும் தங்களது கருத்தை #FreeHinduTemples, #FreeTNTemples போன்ற ஹேஷ்டாக்குகள் மூலம் டுவிட்டரில் பதிவிட்டு டிரண்ட் செய்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
28-பிப்-202121:51:01 IST Report Abuse
TechT உஷார் உஷார் .....அப்படி கொடுப்பதென்றலும் தமிழ் ஹிந்துக்களுக்கு கொடுங்கள் .....இந்த கோவில்களை கட்டியவர்கள் தமிழர்கள் ....தமிழரின் பணத்தை வைத்து கட்டியது .......ஹிந்திக்ரானிடமோ அல்லது ஈஷா போன்ற கார்பொரேட் ஹிந்து கம்பெனி இடம் கொடுக்க வேண்டாம்..உஷார் உஷார்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
28-பிப்-202121:48:04 IST Report Abuse
Rasheel ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் உள்ள மிக அறிய சிற்பங்கள் திருடப்பட்டு இப்போது உள்ள சிற்பங்கள் மாற்றப்படுகின்றன அல்லது வெறுமையாக கட்டப்படுகிறது. இதில் அறிய மற சிற்பங்கள், கல், வெண்கலம், வெள்ளி தங்கம் போன்ற பொருட்கள் அடக்கம். இதை செய்வது கடவுளை மறுக்கும் ஆட்சியில் இருப்பவன். ஆனால் அவன் குடும்பம் கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்கிறது. இதில் லோக்கல் தாதாக்கள், அரசிய்லவ்யாதிகளின் மற்றும் கழக கண்மணிகள் அயோக்கியத்தனம், அதிகாரிகளின் அயோக்கியத்தனம் அடக்கம்.
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
28-பிப்-202121:39:56 IST Report Abuse
vivek c mani சத்குரு கூறுவது மிகவும் சரியான ஒன்று. பொது மக்களுக்கு அரசின் கையில் இருக்கும் கோவில்கள் எல்லாம் ஹிந்து பொது மக்களின் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் முன்னோர்கள் சொத்துக்களால் பராமரிக்கப்பட்டு அவர்களது பிற்கால சந்ததியருக்கு கொடுக்க பட வேண்டிய சொத்து ஆகும். வியாபாரியாய் பாரதத்திற்கு வந்து கபட வழிகளில் பாரத நாட்டை 200 வருடகளுக்கும் மேல் ஆண்ட ஆங்கிலேயர்களின் ஒரே கொள்கை ராப் இந்தியா அண்ட் பீ ரிச் . அதாவது இந்தியா நாட்டின் சொத்தை சூறையாடு . செல்வந்தனாக மாறு என்பதே. நம் நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பல விலையுயர்ந்த பொருட்கள் பிரிட்டிஷ் கஜானாவில் சங்கமமாகிவிட்டன. பாரதத்தை எப்போதும் ஆளப்போகிறோம் எனும் நிலை எடுத்து ஆலன் பாய்ஸ் எனும் பிரெஞ்சு பாதிரி வழிகாட்டிய முறையில் பாரதத்தில் சிறிது சிறிதாக ஹிந்து மதத்தை அழித்து கிறிஸ்துவம் வளர்த்து ஆங்கில மொழியை சிறந்ததென பறைசாற்றி மெக்காலே கல்வி திட்டத்தின் கீழ் ஆங்கில கல்வி வழி மற்றும் வாழ்வுமுறையை பற்றி நாம் படிக்க கட்டாயப்படுத்த பட்டோம். பாரதம் பற்றி ஓ ஈ சி டீ ஆராய்ச்சியில் 2001 பதிப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது , ஆங்கில ஆட்சியில் இந்தியா மிகவும் கீழான நிலையை அடைத்தது என்பதே. இந்த அறிக்கையை வளர்ந்த நாடுகளின் சார்பாக அங்குஸ் மாட்டிசன் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி 1 முதல் 1000 வருடங்கள் வரை பாரதத்தின் ஜி டீ பீ (மொத்த உள்நாட்டு உற்பத்தி ) உலக நாடுகளின் ஜி டீ பீ யில் 32 % அதாவது உலகின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்து. 1001 முதல் 1700 வரை 28 % .1750 ல் 24.5 % . 1800 ல் 20 %. 1830 ல் 18 % . 1900 ல் 1. 70 % இதிலிருந்து தெரிவது ஆங்கில ஆட்சி இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்தது. இதே சமயத்தில் கோவில்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து கோவில் சொத்துக்கள் பொது மக்களின் பொறுப்பிலிருந்து அரசிற்கு மாற்றி கோவில் சொத்துக்கள் சர்ச்களுக்கு குத்தகை விடப்பட்டும் மற்றும் பலவிதங்களில் கோவில் சொத்துக்கள் அரசின் கைக்கு மாற்றப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பிறகு கோவில்களை பொது மக்களுக்கு திருப்பி தந்து அவர்களை நிர்மாணிக்க வழி வகுக்க பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர்கள் வழியை தமிழக அரசும் மற்ற பல மாநிலங்களும் பின்பற்றி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கையில் கோவில் நிர்வாகம் கொடுக்க பட்டு கோவில்கள் சீரழிக்க பட்டுள்ளன. கோவில்கள் பொது மக்கள் அவரகள் சொத்தில் மற்றும் முற்கால அரசர்களால் நன்கொடையாக கொடுக்க பட்ட நிலத்தில் நிர்மாணிக்க பட்டு வழிபாடு நடத்தப்பட்டவை. எனவே கோவில்கள் திரும்பவும் பொது மக்கள் நிர்வகிக்க வழிசெய்ய வேண்டும். மற்ற மத வழிபாடு தலங்கள் போல் ஹிந்து கோவில் வருமானத்திற்கும் வரி விதிக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X