கன்னியாகுமரி: இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்த்து காத்திருப்பது நாட்டுக்கே பெருமை என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ள ‛பெண்களின் சபரிமலை' என்று அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். முன்னதாக அவருக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

பின்னர், சமய வகுப்பு மாநாட்டை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நம் நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை நாமே போட்டுக்கொள்கிறோம் என்பது மிகப்பெரிய பெருமை. நம் நாட்டு தடுப்பூசியை 50-க்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்பார்த்து காத்திருப்பது நாட்டுக்கே பெருமை. கொரோனா நம்மளை விட்டு முழுமையாக விலகவில்லை. அடுத்ததாக பொதுமக்களுக்கான தடுப்பூசி வர இருக்கிறது. பொதுமக்கள் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE