பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையைச் சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி கருப்பு பணம்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி அளவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டைல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் குழுமத்திற்கு சொந்தமான 20 இடங்களில் கடந்த பிப்., 26 அன்று
TaxDept, Detects, BlackIncome, Raids, TilesMaker, வருமானவரி, சோதனை, கருப்பு பணம், ரெய்டு, டைல்ஸ்

சென்னை: வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி அளவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டைல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் குழுமத்திற்கு சொந்தமான 20 இடங்களில் கடந்த பிப்., 26 அன்று ரெய்டு நடைபெற்றது. தமிழ்நாடு, குஜராத், கோல்கட்டா ஆகிய இடங்களில் நடந்த ரெய்டுகளில் ரூ.8.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராமல் டைல்ஸ் விற்பனை மற்றும் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள், மென்பொருட்கள் ரகசிய அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 50 சதவீத பரிவர்த்தனைகள் கணக்கில் வராதது தெரிந்தது.


latest tamil news


முந்தைய வருவாயுடன் ஒப்பிடும் போது ரூ.120 கோடி வருவாயை மறைத்திருக்கக்கூடும். மேலும், போலி நிறுவனங்கள் மூலமாக ரூ.100 கோடிக்கு கணக்கு காட்டியிருக்கிறார்கள். இதன்படி மொத்தமாக கணக்கில் வராத தொகை ரூ.220 கோடி என்று அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க முழுமையாக தயாராக உள்ளனர். ஏப்ரல் 6-ல் தமிழ்நாடு, புதுவையில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கணக்கில் வராத பண நடமாட்டத்தை கண்காணிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
28-பிப்-202120:05:51 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு தன்னை ஒரு முதல்வராகவே நினைச்சுக்கிட்டு வலம்வருகிறானே (தலைமை செயலாளரை என்னை வந்து பாரு என்று கூப்பிடுவதுதான் பாக்கி) என்று பார்த்தேன் இதுதான் மேட்டரா ?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-பிப்-202119:10:04 IST Report Abuse
தமிழவேல் இந்த பரபரப்பு கேட்க ஆசையாத்தான் இருக்கு.. ஆனால், புஸ்ஸுன்னுல போயிடுது...
Rate this:
Cancel
28-பிப்-202118:36:58 IST Report Abuse
ஆரூர் ரங் 17600000000000 செரிக்கும் முன் இந்த ஜுஜுபி 220 கோடி தேவையா? தேர்தல் நேரத்தில் அசிங்கபட்டான்😎 சுடல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X