ஜம்மு: பிரதமராக பதவியேற்ற பின்னரும், ஆரம்ப காலத்தில் தேநீர் விற்றதை மறக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் குஜ்ஜார் சமுதாய மக்களிடையே அவர் பேசியதாவது: பிரதமராக பதவியேற்ற பின்னரும், மோடி ஆரம்ப காலத்தில் தேநீர் விற்றதை மறக்கவில்லை. தேநீர் விற்றேன் என்பதை பெருமையாக சொல்வார். மக்கள் அனைவரும் மோடியிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். அரசியல் ரீதியாக மோடியுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் அடிப்படை தெரிந்த மனிதர். கொரோனா பரவல் அரசியல் சாசன சட்டம் ரத்து காரணமாக காஷ்மீர் பொருளாதாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். வளர்ச்சி பணிகளை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். டில்லியில் இருந்து 3- 4 மடங்கு நிதி அதிகம் வழங்க வேண்டும். தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

குலாம் நபி ஆசாத், ராஜ்யசபாவில் இருந்த ஓய்வு பெற்ற போது, அவரை புகழ்ந்து பேசினார். அப்போது, “உங்களை நான் ஓய்வுபெற விடமாட்டேன். தொடர்ந்து ஆலோசனைகள் கேட்பேன். உங்களுக்காக என்னுடைய வீட்டின் கதவுகள் எப்போதும் திறந் திருக்கும்.” என உருக்கமாக கூறி கண்ணீர் சிந்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE