அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் விமர்சனம்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
சென்னை: முதல்வர் பழனிசாமி தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.சென்னை கொட்டிவாக்கத்தில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்ததும் பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். குறைந்த கட்டண பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்படும். போக்குவரத்து
DMK, Stalin, Farmer, EPS, Palanisamy, திமுக, தலைவர், ஸ்டாலின், பழனிசாமி, விவசாயி வேஷம், இபிஎஸ்

சென்னை: முதல்வர் பழனிசாமி தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்ததும் பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். குறைந்த கட்டண பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்படும். போக்குவரத்து துறை ஊழியர்களின் பணிப்பலன்கள் திமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக வழங்கப்படும். பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு வரப்போகும் திமுக அரசு முன்னுரிமை அளிக்கும். ஜிஎஸ்டி குளறுபடியால் தமிழகத்தின் தொழில்வளம் குன்றிவிட்டது.


latest tamil news


கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த கூட்டத்திற்கு இந்த தேர்தலில் முடிவுக்கட்டுவோம். மெட்ரோ ரயில் திட்டத்தை கருணாநிதி துவங்கினார். ஜப்பான் சென்று நிதி பெற்று வந்தவன் நான். இப்போது மெட்ரோ திட்டம் வெற்றிப்பெற்றதற்கு திமுக தான் காரணம். இதை சென்னை மக்கள் மறக்கமாட்டார்கள். சென்னை மாநகராட்சியில் எங்குபார்த்தாலும் குப்பை நிரம்பி வருகிறது. அதனை அப்புறப்படுத்தாமல், இந்த குப்பை அரசு, குப்பைக்கு வரிப்போட்டது. நான் எதிர்த்ததும் அதனை வாபஸ் பெற்றனர். அதிமுக.,வை வீழ்த்த இந்த ஸ்டாலின் அவதாரம் எல்லாம் எடுக்க தேவையில்லை.


latest tamil news


கடைசி இரண்டு மாதங்களாக நான் சொல்வது அனைத்தையும் முதல்வர் பழனிசாமி செய்துள்ளார். நான் சொல்லும்வரையில் அவருக்கு இதைப்பற்றி எல்லாம் தெரியாது. அவருடைய அறிவிப்புகளில் அவருக்கு எந்தவித ஈடுபாடும் இல்லை. பழனிசாமி, தேர்தலுக்காக விவசாயி வேஷம், சமூகநீதி வேஷம் போடுகிறார். திமுக ஆட்சியில் அனைவருக்கும் சமூகநீதி கொண்டுவருவோம். மே 2ம் தேதி தேர்தல் முடிவுகளில் திமுக ஆட்சி என்பது உறுதியாகும். எங்கள் அரசு, உங்கள் கவலைகளை, கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும். ஸ்டாலினாகிய நான் மக்களின் விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
28-பிப்-202122:53:44 IST Report Abuse
S.kausalya அந்த வேஷம் கூட இவனால போட முடியாதே. மண்டையில இருக்குற கொண்ட தெரிஞ்சி தொலைக்குமே.
Rate this:
Cancel
28-பிப்-202122:16:11 IST Report Abuse
Tamil indian thalapathi next cm in tn.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-பிப்-202122:15:41 IST Report Abuse
A.George Alphonse இவர் சொல்வதுபோல் எடபாடியார் தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடவில்லை.அவர் எப்போதுமே முதலமைச்சர் என்ற கோதாவை விட்டு விட்டு வயல் சேற்றில் இறங்கி விவசாகிகளுடன் வேலை செய்தது இவருக்கு தெரியாதா?புயல் வந்த நேரத்திலும்,வெள்ளம் வந்த நேரத்திலும் மக்களோடும்,விசாகிகளோடும் இவர் சேர்ந்து வயல்வெளிகளில் திரிந்தது ஸ்தாலினுக்கு தெரியவில்லையா? எடபாடியார் எப்போதும் விவசாகியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X