நமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
புதுடில்லி: நமது விவசாயிகள் எதையும் செய்வார்கள் ஆனால், நாட்டிற்கு எதிராக செயல்படமாட்டார்கள் எனக்கூறிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல எனக்கூறியுள்ளார்.டில்லியின் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்து 3
Arvind Kejriwal, Farmers, NotTraitors, Meerut, Delhi, அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி, விவசாயிகள், தேச விரோதிகள் அல்ல,

புதுடில்லி: நமது விவசாயிகள் எதையும் செய்வார்கள் ஆனால், நாட்டிற்கு எதிராக செயல்படமாட்டார்கள் எனக்கூறிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல எனக்கூறியுள்ளார்.

டில்லியின் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்து 3 அல்லது 4 முதலாளிகளுக்கு மத்திய அரசு கொடுக்க நினைக்கிறது. விவசாயிகள் தங்கள் சொந்த வயல்களில் தொழிலாளர்களாக மாறுவார்கள். பிரிட்டிஷார்கள் கூட நம் விவசாயிகளை இந்த அளவுக்கு ஒடுக்கவில்லை. ஒட்டுமொத்த செங்கோட்டை சம்பவமும் பா.ஜ.,வினரால் திட்டமிடப்பட்டது.


latest tamil news


டில்லியில் உள்ள வீதிகள் எங்களுக்கு தெரியாது என்பதால், எங்களை தவறான பாதையில் வழிநடத்தினார்கள் என பலர் என்னிடம் கூறினார்கள். கையில் கொடியை ஏந்தியவர்கள் பா.ஜனதா தொண்டர்கள். நமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல. நம் விவசாயிகள் எதையும் செய்வார்கள், நாட்டிற்கு எதிராக செயல்படமாட்டார்கள். ஆனால், பா.ஜ., கட்சியின் மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக தேச விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. பிரிட்டிஷ்காரர்களுக்கு கூட இந்த தைரியம் இல்லை. ஆனால் இவர்கள் நமது விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-பிப்-202123:26:26 IST Report Abuse
ஆப்பு ப.ஜ வுக்கு எதிரா ஏதாவது சொன்னாலெ தேச விரோதின்னு ஸ்டாம்பு குத்திடறாங்க.
Rate this:
Cancel
ssh - mali,மாலத்தீவு
28-பிப்-202123:04:56 IST Report Abuse
ssh நமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்லதான் ஆனால் விவசாயிகள் பேரில் டெல்லியில் போராட்டம் நடத்துபவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் தேச விரோதிகளே..
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
28-பிப்-202122:14:17 IST Report Abuse
jambukalyan விவசாயிகள் தேசத்ரோகிகள் என்று யார் சொன்னது? நீ ஏன் இல்லாததையும் பொல்லாத்தையும் சொல்லி அமைதியைக் கெடுக்க நினைக்கிறாய்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X