சென்னை: ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
![]()
|
விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே பரபரப்பும் விறுவிறுப்பபும் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., மற்றும் தி.முக., தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க, தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சமத்துவமக்கள்கட்சி பாரிவேந்தனின் ஐ.ஜே.கே கட்சி கூட்டணி அமைத்துள்ளன.இதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் 7-ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
![]()
|
இந்நிலையில் மக்கள்நீதிமய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலந்தூர் தொகுதி ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிக்குட்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளது. அதே போல் கோவை தெற்கு தொகுதியில் 1,45,105 வாக்குகள் பெற்றுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிட கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement