பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோலிய பொருள்: பொருளாதார ஆலோசகர் விருப்பம்

Updated : மார் 02, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கோல்கட்டா:''ஜி.எஸ்.டி., யின் கீழ், பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவது என்பது, மிகவும் நல்ல முடிவாக இருக்கும்,'' என, தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.நம் நாட்டில், கடந்த சில நாட்களாக, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகள், தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. நல்ல முடிவுஇதனால், சாமானிய மக்கள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகி
ஜி.எஸ்.டி., பெட்ரோலிய பொருள், பொருளாதார ஆலோசகர், விருப்பம்

கோல்கட்டா:''ஜி.எஸ்.டி., யின் கீழ், பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவது என்பது, மிகவும் நல்ல முடிவாக இருக்கும்,'' என, தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில், கடந்த சில நாட்களாக, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகள், தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.


நல்ல முடிவு

இதனால், சாமானிய மக்கள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்; இது, சட்ட சபை தேர்தல்களை சந்திக்க இருக்கும் மாநிலங்களில், தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக, தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

எப்.ஐ.சி.சி.ஐ., எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்ட மைப்பினருடன், சுப்பிரமணியன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி., வரியின்கீழ், பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவது என்பது, மிகவும் நல்ல முடிவாக இருக்கும்.


வலியுறுத்தல்

எனினும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தான், அது தொடர்பான முடிவு எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.இதேபோல், பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், வலியுறுத்தி உள்ளார்.


1 கோடி பேருக்கு இலவசம்

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்து, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் செயலர் தருண் கபூர் தகவல் ஒன்றை வெளியிட்டார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஏழை மக்கள், ஒரு கோடி பேருக்கு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படஉள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், எட்டு கோடி பெண்களுக்கு, இலவசமாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
01-மார்-202123:06:10 IST Report Abuse
தல புராணம் அமுச்சருக்கு குயப்பமா இருக்காமே
Rate this:
Cancel
Muga Kannadi - chennai,இந்தியா
01-மார்-202117:04:32 IST Report Abuse
Muga Kannadi Imagine petrol at 20/liter. ரோட்ல ஒருத்தனும் நடந்து போக முடியாது. அவ்வளவு டிராபிக் ஆயிடும்.
Rate this:
enkeyem - sathy,இந்தியா
01-மார்-202121:43:04 IST Report Abuse
enkeyem100% நிதர்சனமான உண்மை...
Rate this:
Raj Kamal - Thiruvallur,இந்தியா
01-மார்-202122:01:17 IST Report Abuse
Raj Kamalமுக கண்ணாடி, ஒங்க அறிவுக்கு நீங்க எங்கேயோ இருக்கவேண்டிய ஆள். இந்த மாதிரி கருத்த யாராவது சொல்லு முடியுமா?...
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
01-மார்-202115:51:17 IST Report Abuse
Rengaraj ஜீ.எஸ்.டீ. என்ற வரம்பில் பெட்ரோல் டீசல் வர வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். அதற்கு மத்திய அரசுடன் இணக்கம் காட்டும் மாநில அரசுகள் தேவை. அவையோ தங்கள் வருமானம் குறைந்துவிடும் என்று கவலைப்படுவார்கள். மாநில அரசுகள் தங்களுக்கு இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்று போராடுவார்கள். மத்திய அரசு ஒரு மாநிலத்துக்கு மட்டும் சலுகை காட்ட முடியாது. ரெண்டு நாள் முன்பு செய்திகளில், டோல்கேட் பாஸ்டாக் முறைமூலம் ஒரு நாளில் கூடுதலாக பதினேழு கோடி கிடைத்தது என்று வந்திருந்தது. இது நாள்வரை இந்த முறை இல்லாதால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி (தோராயமாக) நஷ்டம் இருந்திருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கும் இதே போன்று தொழில்நுட்ப உதவியோடு அந்த அந்த மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை கண்காணிக்கும் மென்பொருளை பெட்ரோல் டீசல் விற்கும் பங்குகளில் நிறுவினால் எத்தனை லிட்டர் விற்பனை என்று கணக்கின் மூலம் வழங்கலாம். . இல்லாவிடில் வண்டிகளின் பதிவு எண் அடிப்படையில் எத்தனை லிட்டர் விற்பனை ஆனதோ அத்தனைக்கு இழப்பீடு என்று ஒரு கணக்கீடு செய்யலாம். ஒரு ருபாய் இழப்பு என்றாலும் எந்த தரப்பும் சமரசம் இல்லாமல் தொகையை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X