இந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்! | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்!

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (3)
Share
இடாநகர்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தில் முதல் மருத்துவமனையிலிருந்த 3 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் இந்தியாவின் முதல் கொரோனா இல்லாத மாநிலமானது.கடந்த 2020 ஜனவரியில் இந்தியாவில் கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அது பல்கி பெருகி மார்ச் இறுதியில் ஊரடங்கு போடும்

இடாநகர்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தில் முதல் மருத்துவமனையிலிருந்த 3 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் இந்தியாவின் முதல் கொரோனா இல்லாத மாநிலமானது.



latest tamil news



கடந்த 2020 ஜனவரியில் இந்தியாவில் கொரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அது பல்கி பெருகி மார்ச் இறுதியில் ஊரடங்கு போடும் நிலைக்கு இட்டுச்சென்றது. இன்னமும் மஹா., கேரளா, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் தொற்று விகிதம் கூடுவதும், குறைவதுமாக இருக்கிறது. தடுப்பூசிகள் ஜனவரி முதல் செயல்பாட்டில் உள்ளன. பொது மக்களுக்கு மார்ச் முதல் தேதியிலிருந்து செலுத்த உள்ளனர். 2-ம் கட்ட தடுப்பூசி இயக்கத்தில் அதிகளவு தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.


யாருக்கும் பாதிப்பு இல்லை



இந்நிலையில் அருணாச்சல் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா நோயாளிகள் இல்லாத முதல் மாநிலமானது அருணாச்சல்.


latest tamil news




அங்கு இதுவரை 16,836 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 56 பேர் இறந்தார்கள். 16,780 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சனிக்கிழமை 312 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதுவரை அம்மாநிலத்தில் 32,325 சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X