பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

Added : பிப் 28, 2021
Share
Advertisement
நெற்குன்றம் : நெற்குன்றம் பகுதிமக்களின் தொடர் போராட்டம் மற்றும் நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. நெற்குன்றத்தில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் இடத்தில், இரவோடு இரவாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை, பகுதிமக்கள் தடுத்து நிறுத்தினர்.புகார்வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு நெற்குன்றம்,
 ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

நெற்குன்றம் : நெற்குன்றம் பகுதிமக்களின் தொடர் போராட்டம் மற்றும் நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

நெற்குன்றத்தில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் இடத்தில், இரவோடு இரவாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை, பகுதிமக்கள் தடுத்து நிறுத்தினர்.புகார்வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு நெற்குன்றம், என்.டி.பட்டேல் சாலையில், கிராம பழைய புல எண், 80/2 தற்போதைய புல எண், 448/1 மற்றும் 448/2 ஆகிய சர்வே எண் அடங்கிய, 1.14 ஏக்கர் அரசு நிலம் உள்ளது.இந்த நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெற்குன்றம் ஊர்மக்கள் சார்பில், முதல்வர், கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ., உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜன., 6ல், ஆக்கிரமிப்பு நிலத்தை, மதுரவாயல் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அளவீடு செய்தனர்.இதையடுத்து, குறிப்பிட்ட நிலம் அரசு நத்தம் மனை என, உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புல வரைப்படத்தின் படி, எல்லைகள் நிர்ணயித்து அளவீடு செய்தனர்.அரசு நிலம் என, உறுதி செய்யப்பட்டும், இன்னும் நிலம் மீட்கப்படாததால், பிப்., 12ல், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.ஆக்கிரமிப்பு நிலம் என, கூறப்படும் பகுதியில், தனியார் நிறுவனம் சமீபத்தில், இரவோடு இரவாக, சுற்றுச்சுவர் அமைக்க முயன்றது. தகவல் அறிந்த ஊர் மக்கள், அங்கு சென்று, அப்பணியை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்தும் நம் நாளிதழில் செய்தி வெளியானது.1.14 ஏக்கர் நிலம்அப்பகுதிமக்களின் தொடர் போராட்டம் மற்றும் நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள இடத்தில், வருவாய் துறை அதிகாரிகள் சார்பில், அந்த இடம், அரசு நிலம் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது, மீட்கப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு, 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு அரசு நிலம் இல்லை. இதனால், சமூகநலக்கூடம், பூங்கா உள்ளிட்டவை அமைக்க போதிய இடம் இல்லாத நிலை இருந்தது.'தற்போது, ஆக்கிரமிப்பில் இருந்த, 1.14 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X