கண்காணிப்பு கேமரா தொடர்பான நடவடிக்கைக்கு மேலவை தலைவர் உத்தரவு

Added : பிப் 28, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகா தலைமை செயலகமான விதான் சவுதாவில், வேண்டுமென்றே சிலர், கண்காணிப்பு கேமராக்களை செயலிழப்பு செய்துள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மேலவை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா தலைமை செயலகமான, பெங்களூரு விதான் சவுதாவில், வி.வி.ஐ.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உயர்

பெங்களூரு : கர்நாடகா தலைமை செயலகமான விதான் சவுதாவில், வேண்டுமென்றே சிலர், கண்காணிப்பு கேமராக்களை செயலிழப்பு செய்துள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மேலவை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா தலைமை செயலகமான, பெங்களூரு விதான் சவுதாவில், வி.வி.ஐ.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உயர் அதிகாரிகள் என தினமும் வந்து செல்வர்.இதனால் பாதுகாப்புக்காக, விதான் சவுதா உள்ளேயும், வெளியேயும், 36 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இது போன்று, விகாஸ் சவுதாவிலும், 24 மணி நேரமும் இயங்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதில், பல கேமராக்கள் செயல்படவில்லை. ஏற்கனவே, விதான் சவுதாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, விதான் சவுதா நுழைவு வாயில்களில், துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

யார் உள்ளே வந்தாலும், அவர்களை முழுமையாக பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப் படுவர்.ஆனால், விதான் சவுதாவுக்குள் நடக்கும் முறைகேடுகளை மறைக்க, வேண்டுமென்றே சிலர், கேமராக்களை செயல்படாமல் செய்ததாக, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டிக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.இது குறித்து, தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மேலவை செயலர் மஹாலட்சுமிக்கு, அவர் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:தலைமை செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படவில்லை.

வேண்டுமென்றே சிலர், பாழ் செய்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.அத்தகையோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்ததாரரை அழைத்து, சரியாக நிர்வகிக்கும்படி உத்தரவிட வேண்டும்.நீங்கள் செயலர் என்ற உயர்ந்த பதவியில் இருப்பதால், தயவு தாட்சண்யமின்றி தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X