லாரியில் மணல் கடத்தல்ஆறு பேர் கைது

Added : பிப் 28, 2021
Share
Advertisement
மங்களூரு : திருட்டுத்தனமாக மணல் கடத்திய லாரி, சுங்கசாவடியில் பிடிக்கப்பட்டது; ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு தாலுகா, சோமேஸ்வரா கடற்கரை அருகில், லாரி ஒன்றின் முன்னும், பின்னும் இரண்டு கார்கள், ஆறு பைக்குகளுடன் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் மணல் நிரப்பப்பட்டிருந்தது.இதை பார்த்த, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, நகர

மங்களூரு : திருட்டுத்தனமாக மணல் கடத்திய லாரி, சுங்கசாவடியில் பிடிக்கப்பட்டது; ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு தாலுகா, சோமேஸ்வரா கடற்கரை அருகில், லாரி ஒன்றின் முன்னும், பின்னும் இரண்டு கார்கள், ஆறு பைக்குகளுடன் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் மணல் நிரப்பப்பட்டிருந்தது.இதை பார்த்த, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், டி.சி.பி., ஹரிராம் சங்கர், லாரியை நிறுத்துமாறு கூறினர். அவர்கள், 'மப்டி'யில் இருந்ததால், லாரி ஒட்டுனர், நிறுத்தவில்லை.

இந்நிலையில், தலபாடி சுங்கசாவடி அருகே, அந்த லாரியை நிறுத்தி, போலீசார் விசாரித்தனர். உல்லால் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்த அவர்கள், லாரி ஓட்டுனர், உட்பட ஆறு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். தப்பியோடிய, நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X