நகை திருடியவர்கள் கைது

Added : பிப் 28, 2021
Share
Advertisement
மைசூரு : மைசூரு நகர உதயகிரி பகுதியில், பூட்டிய வீடுகளை உடைத்து திருடிய இருவரும், திருட்டு நகைகள் விற்றவரும் கைது செய்யப்பட்டனர். 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.மைசூரு மாவட்டம், சரகூர் டவுனை சேர்ந்தவர், பயாஸ் அகமது, 54. மைசூரு ராஜிவ் நகரை சேர்ந்தவர், இம்தியாஸ் அகமது, 43.இவர்கள் இருவரும், கடந்த, 26ல், ராஜிவ் நகர் பகுதியில்

மைசூரு : மைசூரு நகர உதயகிரி பகுதியில், பூட்டிய வீடுகளை உடைத்து திருடிய இருவரும், திருட்டு நகைகள் விற்றவரும் கைது செய்யப்பட்டனர்.

31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.மைசூரு மாவட்டம், சரகூர் டவுனை சேர்ந்தவர், பயாஸ் அகமது, 54. மைசூரு ராஜிவ் நகரை சேர்ந்தவர், இம்தியாஸ் அகமது, 43.இவர்கள் இருவரும், கடந்த, 26ல், ராஜிவ் நகர் பகுதியில் உள்ள, அவுட்டர் ரிங் ரோடு அருகில், 'சான்ட்ரோ' கார் ஒன்றை, சரி செய்வது போன்று நின்று கொண்டிருந்தனர்.அப்பகுதியில் இருந்த போலீசார் சந் தேகமடைந்து, அவர்களிடம் விசாரித்தனர். காரில் சோதனையிட்டனர். காரில் சில ஆயுதங்கள், துப்பாக்கி இருந்தது. இதையடுத்து, அவர்களை, காருடன், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், 'என்.ஆர்.மொஹல்லா காவல் நிலையத்திற்குட்பட்ட, சுபாஷ்நகர் பகுதியில், யாரும் இல்லாத வீடுகளில், கதவை உடைத்து, திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததும்; அங்குள்ள ஒரு வீட்டில், 800 கிராம் தங்க நகைகள், 60 ஆயிரம் ரொக்கம் திருடினர்' என்பது தெரியவந்தது.இவர்களிடமிருந்து, 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 611 கிராம் எடையுள்ள தங்க நகைகள், சான்ட்ரோ கார், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.இவர்கள் இருவரும், திருடிய நகைகளை, முகமது பர்வேஸ், 41, என்பவரிடம் கொடுத்து வந்துள்ளனர். இவர், விற்பனை செய்வதும், அடகு வைப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.மைசூரு உதயகிரியிலுள்ள, முத்துாட் பைனான்ஸில் திருட்டு நகைகளை அடகு வைத்ததையும் தெரிவித்தனர்.இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். உதயகிரி காவல்நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.இவர்கள் மூன்று பேரும், பல திருட்டு வழக்குகளில், சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X