ஒயிட்பீல்டு : பண விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண், பட்டப்பகலில் பெங்களூரில் குத்தி கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு, ஒயிட்பீல்டு, புரூக்பீல்டு அருகில் வசித்து வந்தவர்கள், பாஷாஹுல் செய்க். ஹலிமா பிபி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். கொரோனா பரவலால், தன் குழந்தைகள், சொந்த மாநிலமான, மேற்கு வங்கத்தில் ஹலிமா பிபி விட்டு, விட்டு வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, 9:30 மணியளவில், பணி நிமித்தமாக, அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், ஹலிமாவை, கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இதனால் அவர் உயிரிழந்தார்.தகவலறிந்த, எச்.ஏ.எல்., காவல் நிலைய எஸ்.ஐ., மோகன், 'இறந்த பெண்ணுக்கு, 30 வயதிருக்கலாம்.
ரபிகுல் செய்க் என்பவர் மீது சந்தேகம் உள்ளது' என்றனர்.அப்பெண்ணின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், 'ஹலிமா பிபியிடம், ரபிகுல் செய்க், கடன் வாங்கியிருந்தார்.'சமீபத்தில், இது தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த, ஹலிமா, ரபிகுல்லை தாக்கினார். இதனால் கோபமடைந்த அவர், ஹலிமாவை கொலை செய்திருக்கலாம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE