சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புறநகர் மின்சார ரயில்களில் சட்ட விரோத விளம்பரங்கள்

Added : பிப் 28, 2021
Share
Advertisement
சென்னை : புறநகர் மின்சார ரயில்களில், அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள், நோட்டீஸ்கள் ஒட்டுவது அதிகரித்துள்ளதாக, ரயில்வே ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்குப் பின், சென்னை, கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சி புரம் மார்க்கத்தில், புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் கூட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது. அதே போல், சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரையிலான
 புறநகர் மின்சார ரயில்களில்  சட்ட விரோத விளம்பரங்கள்

சென்னை : புறநகர் மின்சார ரயில்களில், அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள், நோட்டீஸ்கள் ஒட்டுவது அதிகரித்துள்ளதாக, ரயில்வே ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கிற்குப் பின், சென்னை, கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சி புரம் மார்க்கத்தில், புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் கூட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது. அதே போல், சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரையிலான மார்க்கத்திலும், ரயில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில்சேவை மற்றும் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பை போல், ரயில்களில் ஒட்டப்படும் சட்டவிரோத விளம்பர போஸ்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

காலி மனை விற்பனை, மருத்துவ உதவி, வேலை வாய்ப்பு, பொது சேவை நிறுவனங்களில் சேர்க்கை குறித்த அனுமதி பெறாத விளம்பர போஸ்டர்கள், ரயில் பெட்டிகளில் ஒட்டப் பட்டுள்ளன. இது குறித்து, தாம்பரம் ரயில்வே பணிமனை ஊழியர்கள் கூறியதாவது:மின்சார ரயில்கள் தினமும், சுத்தம் செய்யப்படுகின்றன. கட்டுப்பாடுகளை மீறி, ரயில் பெட்டிகளில் ஒட்டப்படும் போஸ்டர்களால், அதை சுத்தப்படுத்தும் ஊழியர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கிறது. ஏற்கனவே, கொரோனா கட்டுப்பாடுகளால், பல்வேறு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், போஸ்டர்களை அகற்றும் பணியிலும் ஈடுபடுவதால், அவர்களுக்கு உடல், மனச்சோர்வு ஏற்படுகிறது.

அது மட்டுமின்றி, போலி விளம்பரங்கள் பலவற்றால், மக்கள் ஏமாறும் நிலைக்கு தள்ளப் படுகின்றன. சில விளம்பரங்கள், இளைஞர்களை குறி வைத்து ஒட்டப்படுவதால், அவர்கள் தவறான வழிக்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்வே போலீசார், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ரயில் பெட்டிகளில் போஸ்டர் ஒட்டப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X